பூஜித், ஹேமசிறியின் தொலைபேசி, வங்கிக் கணக்கை சோதனையிட அனுமதி | தினகரன்


பூஜித், ஹேமசிறியின் தொலைபேசி, வங்கிக் கணக்கை சோதனையிட அனுமதி

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெணான்டோ ஆகியோரின் வங்கி கணக்குகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) குறித்த தகவல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு 80 நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் இடம்பெற்று வரும் வழக்கில் CID யினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதவான் லங்கா ஜயரத்ன இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

அவர்களது தொலைபேசி அழைப்புகள் தொடர்பிலான விபரங்களை வழங்குமாறு உரிய தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...