Thursday, April 18, 2024
Home » கம்போடியாவில் செல்வாக்குச் செலுத்தும் சீனாவின் செயற்பாடுகள் தொடர்பில் குற்றச்சாட்டு

கம்போடியாவில் செல்வாக்குச் செலுத்தும் சீனாவின் செயற்பாடுகள் தொடர்பில் குற்றச்சாட்டு

by Rizwan Segu Mohideen
February 9, 2024 8:54 am 0 comment

தனது நலன்களை சீன மக்கள் குடியரசுடன் இணைக்க மிகவும் விரும்புவதாக கம்போடியா,அனைத்து ஆசியான் (ASEAN) உறுப்பு நாடுகளிலும் நிரூபித்துள்ளது.

2022 இல் ஆசியான் தலைமை பதவியை வகித்தபோது, தென் சீனக் கடலில் சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்கிறது என்பதைக் அறிக்கையில் பயன்படுத்துவது தடுக்கப்பட்டது. இதன் விளைவாக பிராந்தியத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. 45 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் முதன்முறையாக, கம்போடியாவில் நடந்த வருடாந்த கூட்டத்தின் முடிவில், ஆசியான் ஒரு அறிக்கையை வெளியிடத் தவறியது. கூட்டறிக்கையில் பிராந்திய பிரச்சினையை சேர்ப்பதா என்பதில் உறுப்பு நாடுகளிடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த இராஜதந்திர முடக்கமானது பிராந்திய அமைப்பின் தோல்வியாக பரவலாகக் காணப்படுகிறது.

கம்போடியப் பிரதமர் ஹன் சென் 35 ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்சி செய்கிறார்.இவர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் நல்ல நண்பராக உள்ளார். அவர்களின் உறவின் நெருக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், கொரோனா வைரஸ் தொற்று நிலைக்கு மத்தியில் சீனா ஜனாதிபதியை சந்தித்த முதல் வெளிநாட்டுத் தலைவர் ஹன் சென் மாத்திரம் தான்.கம்போடியா மற்றும் சீனாவை “உறுதியான நண்பர்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

.2009 ஆம் ஆண்டில், இருபது உய்குர் அகதிகளை சீனாவிற்கு நாடு கடத்த கம்போடியா முடிவு செய்தது.இது மனித உரிமைக் குழுக்களின் கடும் கண்டனத்தை சந்தித்தது 2019 இல், கம்போடியா உட்பட 37 நாடுகளுக்கான ஐ.நா தூதர்கள், சின்ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மை குழுக்களை சீனா நடத்துவதைப் பாதுகாக்க கோரி மனித உரிமை பேரவைக்கு கூட்டாக கடிதம் எழுதியிருந்தன.

தற்பொழுது சீனா தொடர்பான கம்போடியாவின் கொள்கையில் மாற்றம் எழுந்துள்ளது. சீன அத்துமீறல்கள் பற்றிய எந்தப் பேச்சையும் ஹன் சென் தவிர்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 2020 நடுப்பகுதியில், கம்போடிய பிரதமர் , சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்ததோடு இரு தரப்பும் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சீனா ஏற்கனவே கம்போடியாவின் மிகப்பெரிய நன்கொடையாளர் மற்றும் முதலீட்டாளர் மற்றும் அதன் சிறந்த வர்த்தக பங்காளியாக இருந்த நிலையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பெல்ட் என்ட் ரோட் திட்டத்தில்( BRI கம்போடியா குறைந்தது 5.3 பில்லியன் டொலர் பெறுமதியான பங்கேற்பாளராக உள்ளது. அத்தோடு வீதிகள், பாலங்கள், விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், நீர்மின் அணைகள் மற்றும் விசேட பொருளாதார வலயங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டப் பயன்களை பெறுகிறது. மூன்று வருட சீன தலைமையிலான கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு, கம்போடியாவின் முதல் அதிவேக நெடுஞ்சாலை 2022 இன் பிற்பகுதியில் திறக்கப்பட்டது. இந்தத் திட்டம் தென்கிழக்கு ஆசிய நாடொன்றிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான ஆழமான பொருளாதார உறவுகளை குறிக்கிறது. சுமார் 2 பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்ட இந்த அதிவேக நெடுஞ்சாலை 190 கிலோமீட்ட நீளமானது. இந்த திட்டமானது சீனாவில் இணையக் குற்றங்கள், சூதாட்டம், மனித உறுப்பு வர்த்தகம் மற்றும் பல கொடூரமான குற்றங்களுக்கான மையமாக மாறியுள்ளதாக குற்றச்சாட்டப்படுகிறது.

இலங்கை போன்ற உலகின் ஏனைய நாடுகளில் சீனா தனது பெல்ட் என்ட் ரோட்(BRI) திட்டங்களை புவிசார் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பான குற்றச்சாட்டுகளை ஹன் சென் நிராகரித்துள்ளார். பெல்ட் என்ட் ரோட் ஒப்பந்தங்கள் காரணமாக கம்போடியாவுக்கு சில சமயங்களில் தனது இறையாண்மையை இழக்க நேரிட்டுள்ளது.

சீனா முறையே ரீம் மற்றும் தாரா சகோரில் ஒரு கடற்படை மற்றும் விமான தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது என்ற செய்திகளை ஹன் சென் மறுத்தாலும், பெய்ஜிங் இந்த இடங்களில் உள்கட்டமைப்பு கட்டுமானத்திற்கு நிதியளிப்பதில் தெளிவாக ஈடுபட்டுள்ளது.சீனாவும் கம்போடியாவும் கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றமையும் கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.

தாய்லாந்து வளைகுடாவில் உள்ள ரீம் அல்லது தாரா சகோரில் சீனா செயற்படுவது மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதோடு திடீரென்று தளங்களைச் சொந்தமாக வைத்து இயக்கினால், இது வியட்நாமின் மேற்குப் பகுதியை கடுமையாக அச்சுறுத்தும்.

கம்போடியாவில் அண்மைக்காலமாக நீர் பற்றாக்குறை மற்றும் ஆற்றின் நீர்மட்ட வீழ்ச்சி என்பன சீனாவின் மீகாங் மேல்நிலை அணைக்கட்டினால் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அண்டை நாடுகளான லாவோஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் இருந்து மின்சாரம் இறக்குமதி செய்த பிறகும், கம்போடிய நகர்ப்புறங்களில் மின்சாரம் தடைபடுவது வழக்கமாகியுள்ளது.

இப்போது கம்போடியர்களின் இளைய தலைமுறையினர் மீகாங்கை பாதுகாக்க விரும்புகிறார்கள். அவர்களால் காலநிலை மாற்றத்தை தீர்க்கவோ லாவோஸ் அல்லது சீனாவில் அணைகள் கட்டப்படுவதை தடுக்க முடியாது. இருப்பினும், அவர்கள் மீன்களை சட்டவிரோதமான மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தலில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்யலாம். தென்கிழக்கு ஆசியாவின் உயிர்நாடியாக இருக்கும் மீகாங் நதி தொடர்பான விடயம் தொடர்பில் கவனம் செலுத்தாவிடின் அந்த நதி படிப்படியாக செயல்பாட்டை இழக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சீன மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கம்போடியா மிகவும் பிரபலமாகிவிட்டது, 2019 இல் சீன காவல்துறை அதன் கம்போடிய சகாக்களுடன் ஒரு கூட்டு சட்ட அமுலாக்க அலுவலகத்தை புனோம் பென் தலைநகரில் அமைத்தது. 2021 ஆம் ஆண்டில், ஒன்லைன் மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் குறைந்தது 610 சீனப் பிரஜைகள் சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தாய்ப்பேயின் ஆட்சேபனைகளை மீறி, கம்போடியா பல சந்தர்ப்பங்களில் தாய்வான் நாட்டினரை சீனாவிடம் ஒப்படைத்துள்ளது. பல சந்தர்ப்பங்களில், தாய்வானின் நீதி அமைச்சு சீன பொதுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கம்போடிய அதிகாரிகளுடன் தங்கள் நாட்டினரை கம்போடியாவிலிருந்து சீனாவுக்கு நாடு கடத்துவதைத் தடுக்கும் முயற்சிகளில் தோல்வியுற்றது. தாய்வான் கம்போடியாவுடன் முறையான இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை.( தி ஹொங்கொங் போஸ்ட்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT