பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு | தினகரன்


பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை 39 ரூபாவினால் இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்க விவசாய அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது.

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக நுகர்வோர் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீ.ஹரிஸன் தெரிவித்தார்.

வாழ்க்கை செலவுக் குழுவில் எடுக்கப்பட்ட  தீர்மானத்திற்கு அமைய இவ்வாறு வரியை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அவர் சுட்டிக்காட்டினார். .


Add new comment

Or log in with...