Tuesday, April 23, 2024
Home » பத்தாயிரம் மாணவர்களுக்கு லயன்ஸ் கழகம் முன்னெடுக்கும் சத்துணவுத் திட்டம்

பத்தாயிரம் மாணவர்களுக்கு லயன்ஸ் கழகம் முன்னெடுக்கும் சத்துணவுத் திட்டம்

by sachintha
February 9, 2024 12:02 pm 0 comment

200 நாடுகளில் செயற்படும் லயன்ஸ் கழகங்களின் தலைவி லயன்ஸ் டாக்டர் பற்றி ஹில் (கனடா) அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். கடந்த 30 வருட காலப்பகுதியில் லயன்ஸ் கழகத்தின் சர்வதேசத் தலைவி ஒருவர் வருகை தந்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இலங்கையிலுள்ள லயன்ஸ் 306 சர்வதேச கழகத்தின் தலைவர் லயன்ஸ் இந்கர கௌசல்யா, லயன்ஸ் மகேந்திர அமரசூரிய மற்றும் லயன்ஸ் மகேஷ் பஸ்க்குல், சர்வதேச பணிப்பாளர்கள் ஆகியோருடன் இணைந்து அவர் கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தினார்.

அச்செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த லயன்ஸ் கழகத்தின் தலைவர் டாக்டர் பற்றி ஹில், இலங்கை உட்பட 200 நாடுகளில் சர்வதேச லயன்ஸ் கழகங்கள் செயற்படுகின்றன. 1958 இல் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச லயன்ஸ் கழகம் ஓர் சமூக சேவை அமைப்பு மாத்திரமல்லாமல் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமும் ஆகும். இந்திய லயன்ஸ் கழகம் தான் இலங்கையில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இலங்கையில் 600 லயன்ஸ் கழகம் உள்ளன. 18 ஆயிரம் லயன்ஸ் அங்கத்தவர்களும், லியோ 30 ஆயிரம் பேர் உள்ளனர். லயன்ஸ் கழகத்தின் பணிகள் அடுத்த வருடத்திலிருந்து இரட்டிப்பாக்கப்படும். உலகில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களினதும் ஏனைய மனிதாபிமான நெருக்கடிகளின் போது பாதிக்கப்படும் மக்களுக்கும் உடனுக்குடன் உதவும் சர்வதேச சமூக அபிவிருத்தி நிறுவனம் இது என்றும் குறிப்பிட்டார்.

அதேநேரம், 2004 ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் எமது நிவாரண உதவித் திட்டங்களை முன்னெடுத்தோம். இத்திட்டத்தின் கீழ் 1300 வீடுகளை நிர்மாணித்து கொடுத்துள்ளோம். பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற பாரிய திட்டங்களையும் முன்னெடுத்து அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். அவற்றின் ஊடாக மக்கள் நன்மை அடைந்துள்ளனர்’ என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

இந்நாட்டில் 10 ஆயிரம் மாணவர்களுக்கென சத்துணவுத் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளோம். இத்திட்டம் எமது பிராந்திய லயன்ஸ் கழகங்கள் ஊடாக ஐந்து வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும். அத்தோடு பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம், கண் சத்திர சிகிச்சை முகாம், சிரமதான பணிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக மேம்பாட்டு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 6 மாதங்களில் 5.9 மில்லியன் மக்கள் லயன்ஸ் கழகத்தின் நன்மைகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள்’ எனக் குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் லயன்ஸ் கழகத்தின் 56 கிளைகள் உள்ளன. அந்தந்த கழகங்கள் ஊடாக பிரதேச மட்டத்தில் பல்வேறு சமூக அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இரத்த தானம், கண் சத்திர சிகிச்சை முகாம், பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் போன்ற வேலைத்திட்டங்கள் வாராந்த மற்றும் மாதாந்த அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

வடக்கு கிழக்கில் மூன்று தசாப்த காலம் யுத்தம் இடம்பெற்றது. லயன்ஸ் கழகத்தின் பாரிய உதவிகள் அப்பிரதேசங்களுக்கு இற்றை வரையும் கிடைக்கப் பெறவில்லை. சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றை அமைத்துக் கொடுத்தோம். அதன் பின்னரான காலப்பகுதியில் அப்பிரதேசங்களுக்கு லயன்ஸ் கழகத்தின் பாரிய உதவிகள் கிடைக்கப் பெறவில்லை என்றும் குறிப்பிட்டுக்கூறினார் லயன்ஸ் கழகத்தின் சர்வதேசத் தலைவர்.

‘லயன்ஸ் கழகம் ஒருபோதும் இன, மொழி, மதம் பிரதேச பாகுபாடுகள் பாராது உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் மனிதாபிமான உதவிகளை நல்கிவருகின்றன’ என்றார் லயன்ஸ் கழகத்தின் இலங்கைத் தலைவர்.

அஷ்ரப் ஏ சமத்…

(தெஹிவளை- கல்கிஸ்ஸை விஷேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT