இரத்த பரிசோதனையின் மூலம் புற்றுநோய்களை கண்டறிய ஆய்வு | தினகரன்


இரத்த பரிசோதனையின் மூலம் புற்றுநோய்களை கண்டறிய ஆய்வு

ஒரு புதிய இரத்த பரிசோதனை மூலம் பல வகையான புற்றுநோய்களை துல்லியமாகக் கண்டறியலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

இந்த இரத்தப் பரிசோதனையில் 20க்கும் மேற்பட்ட வகையான புற்றுநோய்களைக் கண்டறிந்து உறுதி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான கிரெயில் இன்க் உருவாக்கிய இந்த பரிசோதனையில், மரபணுக்கள் செயலில் உள்ளதா அல்லது செயலற்று உள்ளதா என்பதைக் கண்டறியும் சிறிய இரசாயன முறையில் மரபணுவை ஆய்வு செய்யும் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. 

கிட்டத்தட்ட 3,600 இரத்த மாதிரிகள் இந்த பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சில புற்றுநோயாளிகளிடமிருந்தும், புற்றுநோய் கண்டறியப்படாதவர்களிடமிருந்தும் எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளைக் கொண்டு சோதனை செய்யப்பட்டது. 

இந்த புதிய சோதனையின்படி, புற்றுநோய் செல்கள் இறக்கும் போது அது இரத்த ஓட்டத்தில் கலக்கும். அதை அடிப்படையாக வைத்து பரிசோதனை செய்யப்படுகிறது. 

பொதுவான புற்றுநோய்களில் ஒரு குறைந்தபட்ச சதவீதத்தை கூட ஆரம்பத்தில் கண்டறிவது என்பது, பல நோயாளிகளுக்கு மிகச் சிறந்த பயனுள்ள சிகிச்சையைப் பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.     


Add new comment

Or log in with...