OPPO A 2020 Series உத்தியோகபூர்வமாக வெளியீடு | தினகரன்


OPPO A 2020 Series உத்தியோகபூர்வமாக வெளியீடு

OPPO A 2020 Series உத்தியோகபூர்வமாக வெளியீடு-OPPO A Series 2020 Officially Launched in Sri Lanka

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தரக் குறியீடான OPPO, இன்று புதிய OPPO A Series 2020 (A 2020 தொடரை) இலங்கையில் பெருமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. OPPO A 2020 தொடர், குறிப்பாக A9 2020 மற்றும் OPPO A5 2020 மொபைல்போன்களை உள்ளடக்கியதாக அமைகின்றது. இது நடுத்தர வகையைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் சந்தைக்கான சமீபத்திய சலுகையாக அமைகின்றது. உயர் தரம் மற்றும் கட்டுப்படியான விலை ஆகியவற்றுடன், சிறந்த புகைப்படம் எடுக்கும் வசதி மட்டுமல்லாது அழகிய வடிவமைப்பு மற்றும் நீண்ட நாள் மின்கல பாவனை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமையும் புதிய OPPO A 2020 தொடரானது, தலைமுறை Z இளைஞர்களுக்கு தொடர்ச்சியாக அத்தியவசியமானதாக ஒன்றாக அமைகிறது.

OPPO A 2020 Series உத்தியோகபூர்வமாக வெளியீடு-OPPO A Series 2020 Officially Launched in Sri Lanka

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, OPPO வின் இலங்கைக்கான பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO) பொப் லீ, "புதிய தசாப்தத்தின் ஆரம்பத்தை கொண்டாடும் விதமாக இந்த இரண்டு மொபைல் போன்களுக்கும் OPPO A Series 2020 என்று பெயரிட்டுள்ளோம். மேலும் கடந்த பத்து ஆண்டுகளில் A தொடரின் வெற்றியை நினைவுகூரும் அதே நேரத்தில் மொபைல்போன் பயனர்களின் புதிய தலைமுறையினரையும் வரவேற்கிறோம்" என்றார்."இப்புதிய பெயரானது, எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கான எமது தொலைநோக்கை பிரதிபலிக்கிறது. இது, OPPO தரக் குறியீட்டின் சமீபத்திய தொழில்நுட்பங்கள், பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு, சிறந்த புகைப்படம் எடுக்கும் வசதி, சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் இளைஞர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு இசைவாக்கமடைதல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது” எனவும் தெரிவித்தார். அந்த வகையில் தற்போது, ​​இந்த இரண்டு நவீன மொபைல்போன்களுடன், OPPO A Series 2020 ஆனது முன்னர் எப்போதுமில்லாத வகையிலான அதிக சாத்தியங்களை வழங்குகிறது!

OPPO A 2020 Series உத்தியோகபூர்வமாக வெளியீடு-OPPO A Series 2020 Officially Launched in Sri Lanka

OPPO A Series 2020 ஆனது பயனர்களை "Play" எனும் பல்செயற்பாட்டை ஊக்குவிக்கிறது, அதன் பல்வேறு நோக்கம் கொண்ட 48MP குவாட் கெமராவானது படைப்பாற்றலின் எல்லைக்கே கொண்டு செல்கிறது. மேலும் 5,000mAh அல்ட்ரா பெட்டரி ஆனது அதனை மேலும் நீண்ட பயன்பாட்டுக்கு இட்டுச் செல்கிறது. இது பயனர்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்குகளை வழங்க வழி வகுக்கின்றது. பயனர்கள் தமது அன்றாட வாழ்க்கையின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்ற அதே நேரத்தில் அவர்களை மிகவும் நேரிய எண்ணத்திற்கு கொண்டு செல்வதோடு, வாழ்க்கையின் சாத்தியப்பாடுகளை அனுபவிப்பதனையும் ஊக்குவிக்கிறது.

OPPO A 2020 Series உத்தியோகபூர்வமாக வெளியீடு-OPPO A Series 2020 Officially Launched in Sri Lanka

பிரத்தியேகமானதும் நன்கு பொருந்தக்கூடியதுமான இது, உலகுடன் இணைய ஆர்வமாக உள்ள இளம், உந்துசக்தி கொண்ட பயனர்களுக்கு ஒரு அற்புதமான தொலைபேசியாக அமைகிறது. இதன் மூலம் அவர்கள் பல்வேறு வேடிக்கை மற்றும் வினோதமான விடயங்களை தேடிப்பெற்று அவர்களின் ஆர்வத்தினை ஈடு செய்கிறது. இதன் ஈர்க்கக்கூடிய பல்லம்சங்கள் கொண்ட கெமரா தொழில்நுட்பமானது, பயனர்களின் படைப்பாற்றல் எல்லையை விரிவுபடுத்துவதோடு, மொத்த மொபைல்போனும் ஒரு அற்புதமான பொழுதுபோக்கு அனுபவத்தையும் சக்திவாய்ந்த செயல்திறனையும் வழங்குகிறது.

பயனர்களுக்கு பல புகைப்பட தெரிவுகளை வழங்கும் பல் அம்ச கெமரா தொழில்நுட்பம்

OPPO A9 2020 ஆனது பல்நோக்கு குவாட் கெமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 48MP பிரதான கெமரா + 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் + 2MP மொனோ லென்ஸ் + 2MP போர்ட்ரெய்ட் லென்ஸ் (Portrait Lens) ஆகியன அடங்குகின்றன. அத்துடன் OPPO A5 2020 உம் பல்நோக்கு குவாட் கெமரா அமைப்போடு வருகிறது. ஆயினும் அதன் பிரதான கெமரா 12MP இனைக் கொண்டுள்ளது. இது அல்ட்ரா நைட் 2.0 செயற்பாடு மற்றும் கலையியல் உருவப்பட பாணிகளை (portrait styles) அனைத்து படப்பிடிப்பு கோணங்களுக்கும் மற்றும் அனைத்து காட்சிகளுக்கும் உகந்த வகையில் வழங்கி பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

OPPO A 2020 Series உத்தியோகபூர்வமாக வெளியீடு-OPPO A Series 2020 Officially Launched in Sri Lanka

48MP பிரதான லென்ஸ் ஆனது, அதிக தெளிவுத்திறனுடன் படத் தெளிவை மேம்படுத்துவதோடு, புகைப்படத்தின் விபரங்களை மேலும் பெற்று தெளிவான படங்களை எடுக்கவும் உதவுகிறது. 8MP 119° (119 பாகை) அல்ட்ரா-வைட் கோண (Ultra-Wide-Angle) லென்ஸ் ஆனது, பட உருவாக்கம் மற்றும் வெளிப்பாடுகளின் அடிப்படையில் அதிக பன்முகத்தன்மையைக் கொண்டு வருகிறது. இதன் காரணமாக, சிறிய இடைவெளி கொண்ட இடத்தில் ஒரு பரந்த புகைப்படத்தை பிடிப்பது எளிதாகிறது. மொனோ லென்ஸ் மற்றும் போர்ட்ரெய்ட் லென்ஸ் ஆனது, பயனர்களை ரெட்ரோ, கிரெய்னி மற்றும் வளிமண்டல இயல்புகளுடனான (retro, grainy, atmospheric filters) உருவப்பட புகைப்படங்களுக்கு (போர்ட்ரெய்ட் - portrait shots) சேர்க்க வழி வகுக்கிறது. அத்துடன், பயனர்களுக்கு தனித்துவம் வாய்ந்த படங்களை வழங்கி, ஏனைய ஸ்மார்ட்போன் தரக் குறியீடுகள் தற்போது வழங்குகின்றவற்றை விட புதிய பாணிகளை இது வழங்குகிறது.

OPPO A 2020 Series உத்தியோகபூர்வமாக வெளியீடு-OPPO A Series 2020 Officially Launched in Sri Lanka

அல்ட்ரா நைட் செயற்பாடு 2.0 ஆனது, இடையூறுகளை குறைப்பதை உறுதிசெய்கிறது. அதே நேரத்தில் HDR மற்றும் மல்டி-ஃபிரேம் டெக்னொலஜி ஆனது பயனர்களுக்கு இரவு காட்சி படங்களை, மனிதக் கண்கள் உணரக்கூடிய வகையிலான பிரகாசத்தையும் விவரத்தையும் விட அதிகளவில் வழங்குகிறது. மனிதர்கள் தங்கள் சூழலில் இருந்து தனியாக செயலாக்கத்திற்கு உட்படுவதால், அவர்களது முகங்கள் பிரகாசமாகவும் அதிக விபரத்துடனும் தோன்றுவதோடு, பின்னணி ஒளி அதிகரிப்பதை பெருமளவில் குறைக்கிறது. சுருக்கமாக கூறுவதாயின், பிரகாசமான வீதி விளக்குகளில் அல்லது மங்கலான கிராமப்புற ஒளியிலான இரவுகள் என்ற வேறுபாடின்றி, புகைப்படங்கள் பிரகாசமாகவும் தெளிவாகவும் அமையும். அல்ட்ரா நைட் மொட் 2.0 ஆனது அல்ட்ரா வைட் ஆங்கிள் புகைப்படங்களை எடுக்கும்போதும் வேலை செய்கிறது.

A9 2020 இல் 16MP செல்பி கெமராவும், A5 2020 இல் 8MP செல்பி கெமராவும் காணப்படுகின்றன. இவை இரண்டும் AI (செயற்கை நுண்ணறிவு) அழகுபடுத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு தொழில் துறைகள் மற்றும் அழகு போக்குகளுக்கு ஏற்ற வகையிலான தனித்துவமாக உருவாக்கப்படும் செல்பிக்களுக்கு பயன்படுகின்றன. இத்தொழில்நுட்பம் தோலின் சாயல், வயது, பாலினம் மற்றும் தோல் நிறத்தை தானாக அடையாளம் காட்டுகிறது. இது  பயனர்களுக்கு தனித்துவமாக்கப்பட்ட அழகுபடுத்தலுக்கு  உதவுகிறது. தோலில் உள்ள வடுக்களை குறைவாக்குவதற்கான அனைத்து புதிய வழிமுறை அம்சங்களும் மேக்கப் இன்றிய தோற்றத்தை உருவாக்குகின்றன. இது பயனர்கள் தங்களின் உருவத்தின் ஒரு சிறந்த பதிப்பை ஏற்படுத்த வழிவகுக்கின்றது.

OPPO இன் சமீபத்திய அதிர்வின்றிய காட்சி (stabilization) தொழில்நுட்பமான கைரோஸ்கோப் (gyroscope) இந்த இரண்டு மொபைல் போன்களிலும் உள்ளமைக்கப்பட்டுள்ளதால், நுகர்வோரிடையே வளர்ந்து வரும் கேள்விக்குரியதாக அமைந்துள்ள உயர்தர அதிரடி செயல் (action) வீடியோக்களுக்கான தேவையையும் பூர்த்தி செய்கிறது. இது ​​நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் போது, மேம்பட்ட வீடியோ பாணிகளுடன் மிகவும் நிலையான படப்பிடிப்பை உருவாக்குகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் சொந்த திரைக்காட்சிளை ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் உருவாக்க முடிகிறது. கண்கவர் உள்ளடக்கத்தைக் கொண்ட குறும்பட செயலிகளின் சகாப்தத்திற்கு இது ஏற்றதாக அமைகிறது.

கவர்ச்சி மற்றும் பயனர் விரும்பத்திற்குரிய நுண்ணறிவார்ந்த வடிவமைப்பு

OPPO A Series 2020 ஆனது ஒரு புதிய மற்றும் மிகவும் சிறிய நீர்த்துளி (Waterdrop) திரையை கொண்டதாக அமைந்துள்ளது. முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது இத்திரையில் சிறந்த தோற்றம் மற்றும் பயனர் அனுபவத்திற்கு ஏற்ற வகையில், ஒட்டுமொத்த பரப்பளவில் 31.4% குறைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.6.5 அங்குல முழுத் திரையில் திரைக்கு - உடல் விகிதமானது 89% ஆக்கப்பட்டுள்ளது. இது மிக வலிமை மிக்க கோர்னிங்® கொரில்லா® கண்ணாடி 3+ (Corning® Gorilla® Glass 3+) கொண்டதுடன், மூன்றாம் தலைமுறையை விட இரண்டு மடங்கு கடினமானதாகவும் கீறல்களுக்கு அதிக எதிர்ப்பையும் கொண்டதாக அமைகிறது. மிக சிறப்பாக ஊடு செல்லும் திரையானது, அதிக நேரடி ஒளியின் கீழ் திரை வாசிப்பை மேம்படுத்துவதோடு, மங்கலான அல்லது இருண்ட சூழலில் உண்மையான வண்ணங்களை வெளிப்படுத்துவதை உறுதி செய்கிறது. இதேவேளை நீல ஒளி வடிகட்டியனாது (blue light filter) கண் சோர்வை நீக்குவதோடு குறைந்த ஒளியில் பயனர்களின் கண்பார்வைக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

மேலும் OPPO A9 2020, துடிப்பான, கண்கவர் தோற்றத்திற்கான 3D பல்வர்ண வடிவமைப்புகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு மொபைல்போனும் நான்கு வளைந்த 3D தாள்களால் தயாரிக்கப்படுகிறது. அவை மெல்லியதாகவும் கைக்கு வசதியாகவும் அமைகின்றன. இது நனோ அளவு வடிவ அம்சங்களை கொண்டுள்ளதோடு,அவை வெவ்வேறு கோணங்களில் மற்றும் வெவ்வேறு ஒளி அளவுகளின் கீழ் பல சாயலுடன் கூடிய, கதிரியக்க வண்ணங்களை தோற்றுவிக்கின்றன.

அற்புதமான அனுபவம் மற்றும் செயல்திறனுக்கான சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள்

பெரிய கொள்ளளவான 5,000 mAH மின்கலமானது, நாள் முழுவதும் சாதனத்தை பயன்படுத்த உதவுகிறது. இது 19 மணி நேர தொடர்ச்சியான செயல்பாட்டுக்கு இசைவான திறன் கொண்டது. இம்மின்கலமானது மறுதலையான சார்ஜிங் (reverse charging) செயற்பாட்டை கையாளவும், செயலில் இருந்து விடுவித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதோடுபயணத்தின்போது விரைவாக சார்ஜ் இல்லாது போகும் கவலையிலிருந்து விடுவிக்கிறது.

ஒலி நயத்தைப் பொறுத்த வரையில், OPPO A Series 2020 ஆனது இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் அமைகிறது. அவை உயர்ந்த மற்றும் மேம்பட்ட ஒலி தரத்தை வழங்குவதோடு, அதிவேக சரவுண்ட் சவுண்ட் எபெக்டுடன், ஒலியானது முழு சாதனத்தையும் மிகத் தெளிவுடன் வெளிப்படுத்துகிறது. டொல்பி அட்மோஸ்® உடனான மிகவும் ஆழமான, விறுவிறுப்பான மிகச் சிறந்த ஒலி , வீடியோ மற்றும் கேமிங் அனுபவத்திற்கான ஒலி விளைவுகளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் வழங்குகின்றன. இது ஹை-ரெஸ் ஓடியோ (Hi-Res Audio) சான்றிதழையும் பெற்றுள்ளதால் சிறந்த ஒலி தரத்தை உறுதிசெய்கிறது. மேலும் திசை சார்பில் அமைந்த தொழில்நுட்பங்கள் மிகவும் விறுவிறுப்பான, யதார்த்தமான மற்றும் அதிவேக ஒலி அனுபவத்தை உருவாக்குகின்றன.

இவை தவிர, OPPO A Series 2020 ஆனது, ஒரு அதி-சக்திவாய்ந்த செயல்திறனைக் கொண்டுள்ளது. இதற்கு குவால்காம் ஸ்னாப்ட்ரகன் 665 (Qualcomm Snapdragon 665) இயங்குதளத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். 8 கோர் 64 பிட் (8-core 64-bit) புரசொசர். ஸ்னாப்டிராகன் 450 ஐப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட முந்தைய A7 உடன் ஒப்பிடும்போது, ​​A9 2020 இன் CPU 40% இனால் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அதன் GPU 100% இற்கும் அதிகமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் அனுபவத்திற்காக, கேம் பூஸ்ட் 2.0 (Game Boost 2.0) ஊக்குவிக்கும் தொழில்நுட்பம், மேம்பட்ட பிரேம் பூஸ்ட் மற்றும் டச் பூஸ்டை வழங்குகிறது. இவை இரண்டும் தொடுதிரை தாமதம் மற்றும் பின்னடைவைக் குறைப்பதன் மூலம் மின்னல் வேகத்திலான கேம் பிளே செயற்பாட்டை வழங்கி, ஒட்டுமொத்த சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குகிறது. பிரேம் பூஸ்ட் (Frame Boost) ஆனது செயலற்ற நிலை மற்றும் விளையாட்டின் போதான பின்னடைவை தீர்க்கும் வகையில் தொலைபேசியின் செயல்பாடுகளின் நிகழ்நேர (real-time) கண்காணிப்பை மேற்கொள்கின்ற அதே நேரத்தில், தொலைபேசி அதிக வெப்பமடைவதைத் தவிர்ப்பதற்கு அல்லது அதிக சக்தியைப் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கான வளங்களை ஒதுக்குகிறது. டச் பூஸ்ட் (Touch Boost) ஆனது கேமிங் நடவடிக்கையின் போது தொடுதிரையின் பதிலளிப்பில் பிரத்தியேகமான மாற்றங்களைச் செய்வதோடு, செயலிகள் இயங்கும் போது தொடுதிரையின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக தொலைபேசி மிக வேகமாகவும் விரைவாக துலங்கலை காண்பிக்கக்கூடியதாகவும் அமைகிறது.

அன்ட்ரொய்ட் 9.0 ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 6 (ColorOS 6) இனை இரு மொபைல்களும் இயங்குகின்றன. இது நீண்ட கால பயன்பாட்டிற்குப் பிறகும் மிகவும் நேர்த்தியான, தெளிவான மற்றும் இனிமையான காட்சி அனுபவத்தை வழங்குகிறது. கைரேகை மற்றும் முக திறத்தல் அம்சங்களை வழங்குவதோடு, ஸ்மார்ட் அசிஸ்டென்ட், ரைடிங் மோட், மியூசிக் பார்ட்டி (மேற்கு ஐரோப்பாவில் கிடைக்காது) மற்றும் சைகை வழி அறிவுறுத்தல் (Gesture Navigation) போன்ற பல்வேறு ஸ்மார்ட் செயல்பாடுகளுடன் இந்த இயங்குதளம் அமைந்துள்ளது. இதன் மூலம் பயனர் வசதி, பாதுகாப்பு மற்றும் தொலைபேசியின் ஒட்டுமொத்த பல் அம்சங்களும் மேம்படுத்தப்படுகிறது.

இவற்றையும் கடந்து, வாழ்க்கையின் அழகான தருணங்களை பதிவு செய்வதற்கு அவசியமான அதிக நினைவகம் மற்றும் பல் நினைவக தெரிவுகளான 128GB / 64GB உயர் நினைவக திறன் மற்றும் 256GB நினைவகத்திற்கு இசைவான மூன்று அட்டை (இரட்டை சிம் + மைக்ரோ நினைவகம்) வசதி போன்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். OPPO A9 மரைன் கிரீன் அல்லது ஸ்பேஸ் பேர்பல் (Marine Green or Space Purple) இனது விலை ரூ. 59,990 ஆகவும், OPPO A5 மிரர் பிளக் அல்லது டேஸ்லிங் வைற் (Mirror Black or Dazzling White) இனது விலை ரூ .44,990 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

OPPO பற்றி
வளர்ந்து வரும் உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான OPPO, கடந்த பத்து ஆண்டுகளாக நுகர்வோர் நடத்தை மற்றும் அபிலாஷைகளைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுக்கு ஏற்ப தொழில்நுட்ப முன்னேற்றங்களை மையமாகக் கொண்ட புதுமையான தொழில்நுட்பம், நுணுக்கமான வடிவமைப்பு மற்றும் கெமரா நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசாதாரண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொபைல் துறையில் சுழலும் கெமரா, அல்ட்ரா எச்டி அம்சம் மற்றும் 5 x டுவல் கெமரா Zoom தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை,  மொபைல் துறையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பல ஸ்மார்ட் கண்டுபிடிப்புகளில் அறிமுகப்படுத்திய முதல் வர்த்தக நாமம் OPPO ஆகும்.

2016 ஆம் ஆண்டில் செல்பி-மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, OPPO புதிய தொழில்நுட்பம் மற்றும் அதன் நுண்ணறிவு பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. அதன் பல மாதிரிகள் மற்றும் வரம்புகள் மூலம் ஏராளமான வடிவமைப்புகள் மூலம் நுகர்வோர் அனைவரையும் அவர்களிடம் உருவாகி வரும் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது.

200 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர் OPPO ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர், OPPO இன் வர்த்தகம் 35 நாடுகளையும் பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாகும். 400,000 இற்கும் மேற்பட்ட காட்சியறைகளைக் கொண்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் 4 ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது. அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறந்த ஸ்மார்ட்போன் புகைப்பட அனுபவத்தை வழங்கி வருகிறது.


Add new comment

Or log in with...