மர்மமான முறையில் இறந்த 7 யானைகளின் சடலங்கள் மீட்பு | தினகரன்

மர்மமான முறையில் இறந்த 7 யானைகளின் சடலங்கள் மீட்பு

மர்மமான முறையில் இறந்த 7 யானைகளின் சடலங்கள் மீட்பு-Habarana Hiriwadunna-7 Elephants Dead Body Found

ஹபரண, ஹிரிவடுன்ன, தும்பிகுளம வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்த 7 யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில், நேற்றைய தினம் (27) இறந்த நான்கு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டதோடு, இன்றையதினம் (28) மேலும் 3 யானைகளின் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. அதற்கமைய, கடந்த இரு நாட்களில் குறித்த பகுதியில் ஏழு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மர்மமான முறையில் இறந்த 7 யானைகளின் சடலங்கள் மீட்பு-Habarana Hiriwadunna-7 Elephants Dead Body Found

இறந்த யானைகளில் மூன்று கர்ப்பிணி யானைகளும் காணப்படுவதாக வனஜீவராசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த யானைகளின் இறப்புக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், ஏதேனும் மனித செயற்பாடுகள் காரணமாக இருக்கலாம் என, வனஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மர்மமான முறையில் இறந்த 7 யானைகளின் சடலங்கள் மீட்பு-Habarana Hiriwadunna-7 Elephants Dead Body Found

சிகிரியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள், இராணுவம், ஹபரண பொலிஸார் ஆகியோர் பிரதேசவாசிகளுடன் இணைந்து, மேலும் யானைகளின் சடலங்கள் உள்ளதா என தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பெண் யானையொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு, இன்று (28) பிற்பகல் வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹாரே விஜயம் செய்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலன்னறுவை வனஜீவராசிகள் வலயத்தின் உதவி பணிப்பாளர் W.D.M.J. விக்ரமசிங்க, இந்தச் செயலைச் எவரேனுமொருவர் செய்திருந்தால், அவர்களுக்கெதிராக உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மர்மமான முறையில் இறந்த 7 யானைகளின் சடலங்கள் மீட்பு-Habarana Hiriwadunna-7 Elephants Dead Body Found

இன்று காலை கண்டுபிடிக்கப்பட்ட இறந்த யானை ஒன்றின் சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொண்டிருந்த வேளையில், ​​அதன் குட்டியொன்று அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து, அதற்கு மயக்க மருந்து வழங்கி வேறொரு பிரதேசத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த யானைகளின் மர்மமான மரணத்திற்கான காரணத்தை அறிய, கிரித்தலை, அநுராதபுரம், வட மேல் வலயங்களுக்கு பொறுப்பான 3 கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட 4 வனவிலங்கு குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன.

மர்மமான முறையில் இறந்த 7 யானைகளின் சடலங்கள் மீட்பு-Habarana Hiriwadunna-7 Elephants Dead Body Found

(படங்கள்: காஞ்சன ஆரியதாஸ)

Add new comment

Or log in with...