சாய்ந்தமருது மீனவர்களை தேட விமானப்படை விமானங்கள் | தினகரன்


சாய்ந்தமருது மீனவர்களை தேட விமானப்படை விமானங்கள்

சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை தேடும் பணியில் கடற்படையினரும் விமானப் படையினரும் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். 

சாய்ந்தமருதிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் எட்டு நாட்கள் கடந்த போதிலும் இதுவரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து மீன்பிடி அமைச்சர் ஹரிசனை புதன்கிழமை (25) சந்தித்து கேட்டுக் கொண்டதற்கிணங்க கடற்படையினரும் விமானப் படையினரும் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். 

இதற்கிணங்க மீன்பிடி அமைச்சர் ஹரிசன், விமானப்படை தளபதியை தொடர்பு கொண்டு குறித்த விடயத்தை தெரியப்படுத்தியதுடன் கடற்பரப்பில் விமானங்கள் மூலம் தேடுதலை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். 

இதற்கு மேலதிகமாக மாலைதீவு மற்றும் மியன்மார் போன்ற வெளிநாட்டு கடற்பரப்பில் தேடுதலினை மேற்கொள்ளும் பொருட்டு மீன்பிடி திணைக்களம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் இரு நாட்டு தூதுவர்களூடாக அந்நாட்டு மீன்பிடி நிறுவனங்கள் கடற்படை மற்றும் விமானப்படைகளின் ஊடாக தேடுதல் மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்தார். 

சாய்ந்தமருதைச் சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36), இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37), காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47) ஆகிய மீனவர்களே குறித்த படகில் சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(ஒலுவில் விசேட நிருபர்) 


Add new comment

Or log in with...