சாய்ந்தமருதில் 8 நாட்களாக 3 மீனவர் மாயம் | தினகரன்


சாய்ந்தமருதில் 8 நாட்களாக 3 மீனவர் மாயம்

அம்பாறை, மாளிகைக் காட்டுத் துறையிலிருந்து கடந்த 18ஆம் திகதி ஆழ்கடல் இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களும் எட்டு நாட்களாகியும் இதுவரை கரை திரும்பவில்லையென குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சாய்ந்தமருதை சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36), இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ) , காரைதீவை சேர்ந்த சண்முகம் ஸ்ரீகிருஷ்ணன் (வயது 47) ஆகிய மீனவர்களே படகில் பயணம் செய்துள்ளனர்.

இவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸ், கடற்படை ஆகியோருக்கு ஆரம்ப நாள் முதல் அறிவித்துள்ளதுடன் மீனவ சங்கங்களும் கடந்த ஆறு நாட்களாக கடலில் தேடுதல் வேட்டையை ஆரம்பித்திருந்தும் இதுவரை தேடுதல் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

மீனவ சங்கங்களின் அடுத்த கட்ட முயற்சியாக கொழும்புக்கு சென்று அங்குள்ள உயரதிகாரிகள் மற்றும் மீன்பிடித்துறைக்குப் பொறுப்பான அமைச்சருடனும் பேசி தேடுதலை விஸ்தரிக்க உள்ளதாக தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...