தினேஷ் சந்திமால் இராணுவத்தில் இணைவு | தினகரன்


தினேஷ் சந்திமால் இராணுவத்தில் இணைவு

தினேஷ் சந்திமால் இராணுவத்தில் இணைவு-Sri Lankan Cricketer Dinesh Chandimal Joins Sri Lankan Army

இலங்கை கிரிக்கட் அணி வீரர் தினேஷ் சந்திமால் இலங்கை இராணுவத்தில் இணையவுள்ளார்.

முன்னாள் கிரிக்கட் அணித்தலைவரான இவர், இலங்கை தன்னார்வப் படையணியின் அதிகாரியாக தினேஷ் சந்திமால் சேவையாற்றவுள்ளார்.

இதேவேளை, இலங்கை இராணுவத்தின் அதிகாரம் பெற்ற அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளதாக, இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து தெரிவித்தார்.

இலங்கை இராணுவ கிரிக்கெட் அணியையும் இவர் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேசிய அணியில் விளையாடும் மேலும் நான்கு வீரர்கள் எதிர்வரும் வாரங்களில் இராணுவத்தில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...