தேவாலயத்தில் ரூ. 5 கோடி நகை கொள்ளை; 4 பேர் கைது | தினகரன்


தேவாலயத்தில் ரூ. 5 கோடி நகை கொள்ளை; 4 பேர் கைது

தலாத்துஓயா, கல்தென்ன பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் பணமும் தங்கநகைகளும் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

50 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கநகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இச்சந்தேகநபர்கள் இன்று (26) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (25) அதிகாலை 3.45 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த 06 பேர், தேவாலயத்தில் இருந்தவர்களை அச்சுறுத்தி, கை, கால்களை கட்டி 400,000 ரூபா பணம் மற்றும் 10 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய தங்கநகைகள் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

வீதியின் இரு மருங்கிலும் இருந்த CCTV. கமெராக்களின் உதவியுடன் மற்றும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் முச்சக்கரவண்டியை கண்டுபிடித்துள்ளதோடு, அதன் அடிப்படையிலான தகவலைக் கொண்டு திருடப்பட்ட தங்கநகைகளுடன் 04 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.  


Add new comment

Or log in with...