Friday, March 29, 2024
Home » இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்திய 4.6 Kg தங்கம் பறிமுதல்
பாம்பன் அருகே திருச்சி சுங்கத்துறையினரால்

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்திய 4.6 Kg தங்கம் பறிமுதல்

சுமார் ரூ. 11 கோடி 28 இலட்சம் ரூபா பெறுமதி

by damith
February 5, 2024 7:30 am 0 comment

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 03 கோடி மதிப்பிலான தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை ரூபாவில் சுமார் 11 கோடி 28 இலட்சம் ரூபா என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக பாம்பன் கடற்கரைக்கு தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படவுள்ளதாக திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (03) காலை திருச்சியிலிருந்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து பாம்பன் மண்டபம் முந்தல் முனை மற்றும் குந்துகால் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்திய போது தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரை விரட்டி பிடித்தனர். அவரது வண்டியை சோதனை செய்த போது சுமார் 4.634 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடத்தல் தங்கத்தையும், இராமேஸ்வரம் நம்புராஜன் என்பவரை கைது செய்து இராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். கைது செய்யப்பட்ட நம்புராஜனிடம் விசாரணை நடத்தி பின் இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் இந்திய மதிப்பு சுமார் மூன்று கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இலங்கை ரூபாவில் சுமார் 11 கோடி 28 இலட்சம் ரூபா என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் குறிப்பாக தனுஷ்கோடி அரிச்சல்முனை இராமேஸ்வரம், பாம்பன், குந்துகால் முந்தல் முனை, வேதாளை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கடத்தல் தங்கம் போதைப்பொருள்களென கைப்பற்றப்பட்டு வருவது மீனவர்கள் மத்தியிலும் மீனவக் கிராம மக்களிடையே இப்பகுதிகள் கடத்தல் கூடாரமாக மாறி வரும் சூழல் உருவாகி வருவதாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT