அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு | தினகரன்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள்  நாளை (18) 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நாளை காலை 8.00 மணி முதல் இப்பணிப்பகிஷ்கரிப்பு  முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இப்பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...