Thursday, April 25, 2024
Home » 15 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தை நடத்திய இலங்கை – மாலைதீவு வர்த்தக சபை

15 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தை நடத்திய இலங்கை – மாலைதீவு வர்த்தக சபை

by mahesh
February 7, 2024 6:00 am 0 comment

இலங்கை – மாலைதீவு வர்த்தக சபையின் (SLMLBC) இலங்கை வர்த்தக சம்மேளனம் vd;gdtw;wpd; 15வது வருடாந்த பொதுக் கூட்டம் (AGM), 17 ஆகஸ்ட் 2023 வியாழன் அன்று, கொழும்பு மேரியட் ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாலைதீவு உயர்ஸ்தானிகர் அலி ஃபைஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் சிலோன் டூர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுரேன் எதிரிவீர மாலைக்கான சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டார்.

2022-2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை – மாலைதீவு வர்த்தக சபையின் தலைவராகப் பணியாற்றிய திரு. கெவின் எட்வர்ட்ஸ், சபையின் சார்பாக தனது தொடர்ச்சியான முயற்சிகள் பற்றி கலந்துரையாடினார்.

கடந்த சில வருடங்களாக இலங்கை எதிர்கொள்ளும் சில பொருளாதார மற்றும் அரசியல் தடைகள் எவ்வாறு வருமானத்தை ஈட்டுவதற்கு பங்களிக்கும் முக்கிய தொழில்களை மோசமாக பாதித்துள்ளது என்பது பற்றிய புள்ளிவிபர பகுப்பாய்வு அவரது உரையின் முக்கிய மையமாக இருந்தது.

எவ்வாறாயினும், இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டுள்ளதாகவும், இது எதிர்காலத்திற்கு, குறிப்பாக சுற்றுலாத் துறையில் சிறந்ததாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்துக் கூறுகையில், இலங்கையைப் பாதித்த நிகழ்வுகளுக்கு அவர் தனது அனுதாபத்தை வெளிப்படுத்தினார், குறிப்பாக 2019 இன் ஈஸ்டர் தாக்குதல் 2020 இல், கொவிட் தொற்றுநோய் என்பனவற்றால் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துற்குச் சென்றது.

இன்று, நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளப் போராடிக்கொண்டிருக்கிறது என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT