வைபவங்களில் அரச சொத்துகளை பயன்படுத்தினால் அறிவிக்கவும் | தினகரன்

வைபவங்களில் அரச சொத்துகளை பயன்படுத்தினால் அறிவிக்கவும்

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை ஆதரிக்கும் நிகழ்வுகளில் பொதுச் சொத்துகளைப் பயன்படுத்துவது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பொதுமக்களிடம் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச செலவில் இடம்பெறும் அரசாங்க வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளில் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் வகையிலான நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அவற்றை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேரடியாக அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...