“ஏஸியன் பேங்கர் இலங்கை விருது” வென்ற கொமர்ஷல் வங்கி | தினகரன்


“ஏஸியன் பேங்கர் இலங்கை விருது” வென்ற கொமர்ஷல் வங்கி

முதல் தடவையாக இடம்பெற்ற “ஏஸியன் பேங்கர் இலங்கை விருது” விழாவில் கொமர்ஷல் வங்கி நான்கு விருதுகளை வென்றுள்ளது. சில்லறை வங்கித்துறை மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பாகப் பணியாற்றிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை அங்கீகரித்து கெளரவப்படுத்தும் வகையில் இந்த விழா இடம்பெற்றது. 

தனது இணைய வங்கி மேடை மூலமான தனியார் கடன் வேண்டுகோளுக்கான உராய்வுகள் அற்ற சிறந்த கடன் மதிப்பீட்டு முன்மொழிவு பிரயோகம் அல்லது திட்டம், தனது ஒட்டுமொத்த வங்கி முறைமைகளில் ஒன்றாக தன்னியக்க முறையில் கணக்குகளைத் திறக்கும் செயற்பாட்டை உள்ளடக்கிய சிறந்த உற்பத்தித் திறன் ஆற்றல் தன்னியக்கச் செயற்பாடு பிரயோகம் மற்றும் திட்டம், வெளிநாட்டில் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் பணத்துக்கான கார்ட்டின் மூலம் ஆண்டுக்கான வெளிநாட்டு பணம்பெறல் உற்பத்தி மற்றும் அதன் உச்சபட்ச குத்தகை வசதிகளை உள்ளடக்கிய ஆண்டுக்கான தன்னியக்க கடன் உற்பத்தி ஆகிய நான்கு விடயங்களுமே விருதுகளை வென்றுள்ள பிரிவுகளாகும். 

வங்கியின் தனியார் கடன் கோரிக்கை வசதியான சிறந்த கடன் மதிப்பீட்டு முன்மொழிவு பிரயோகம் இதற்கு முன்னர் கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத பலருக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளது. இது விரிவானதோர் பிரிவினருடன் கொடுக்கல் வாங்கலுக்கு வழியமைத்துள்ளது. வங்கி தனது டிஜிட்டல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் மூலோபாயத்தை நோக்கிய ஒரு செயற்பாடாக இதனை அறிமுகம் செய்துள்ளது. இந்த வேண்டுகோளை முன்வைக்கும் போதே தனியார் கடன் பற்றிய அங்கீகாரம் உடனடியாகக் கிடைத்து விடுவதால் இது மிகவும் பிரயோசனமானதோர் வழிமுறையாகவும் அமைந்துள்ளது.

இத்தகைய ஒரு முக்கிய சேவையை இந்த நாட்டில் வேறு எந்த ஒரு நிறுவனத்திலும் பெற்றுக் கொள்ள முடியாது. வங்கியின் கிளைகளுக்கு விஜயம் செய்யாமலேயே கடனுக்கான விண்ணப்பத்தை இணைய வழியாக இங்கே முன் வைக்கலாம். விண்ணப்பம் செய்பவர் கடன் பெற தகுதியானவராயின் உடனடியாக அது குறித்து அவருக்கு அறிவிக்கப்படும்.


Add new comment

Or log in with...