Construct Exhibition 2019: உத்தியோகபூர்வ வங்கியியல் அனுசரணையாளராக செலான் | தினகரன்

Construct Exhibition 2019: உத்தியோகபூர்வ வங்கியியல் அனுசரணையாளராக செலான்

செலான் வங்கி, Construct Exhibition 2019நிகழ்வின் உத்தியோகபூர்வ வங்கி அனுசரணையாளராக இணைந்திருந்தது. இலங்கை தேசிய நிர்மாண சம்மேளனத்தினால் (NCASL) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்த கண்காட்சி நிகழ்வு, ஆகஸ்ட் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் தொடர்ச்சியான 19ஆவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

தெற்காசிய பிராந்தியத்தில் பெருமளவு வரவேற்பைப் பெற்ற நிர்மாணத்துடன் தொடர்புடைய மாபெரும் கண்காட்சி நிகழ்வாக இது அமைந்துள்ளதுடன், சிவில் நிர்மாணம், கல் அகழ்தல், நிர்மாண மூலப்பொருட்கள் மற்றும் இதர நிர்மாணத்துடன் தொடர்புடைய வியாபாரங்கள் ஆகியன இக்கண்காட்சியில் இடம்பெற்றன. ஆயிரக் கணக்கான மக்களின் கனவு இல்லத்தை நனவாக்கும் வகையில் ஒரே கூரையின் கீழ் அமைந்த ஒரு கண்காட்சியாக அமைந்திருப்பதுடன், துறைசார் நாட்காட்டியில் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும் பதிவாகியுள்ளது.  

இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியமை தொடர்பில் செலான் வங்கியின் வாடிக்கையாளர் வங்கியியல் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் திலான் விஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில், வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் நிர்மாணத்துறைசார் கண்காட்சி நிகழ்வின் உத்தியோகபூர்வ வங்கி அனுசரணையாளராக செலான் வங்கி தொடர்ச்சியாக நான்காவது வருடமாகவும் கைகோர்த்திருந்தது. இந்த காலப்பகுதியில், இந்நிகழ்வு பெருமளவு வெற்றிகரமாக அமைந்திருந்ததை நாம் அவதானித்ததுடன், தமது இல்ல கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு நிதி உதவிகளை நாடியிருந்த நுகர்வோருக்கு செலான் வீட்டுக் கடன்கள் மிகவும் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது. அன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் வகையில், செலான் வங்கியினால் கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் வழங்கப்படுவதுடன், சிறந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த கண்காட்சி நிகழ்வினூடாக சேவை வழங்குநர்களையும், வாடிக்கையாளர்களையும் ஒரே இடத்தில் ஒன்றுதிரட்ட முடிந்ததுடன், இந்த வெற்றிகரமான நிகழ்வில் நாமும் பங்கேற்றிருந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். என்றார்.  


Add new comment

Or log in with...