இலங்கையில் பொன்விழாவை கொண்டாடும் ரோட்டரி கழகம் | தினகரன்


இலங்கையில் பொன்விழாவை கொண்டாடும் ரோட்டரி கழகம்

ரோட்டரி கழகம் அதன் பொன்விழாவை கொண்டாடகின்றது. ரோட்டரி இன்டர்நேஷனல் 1905ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சேவை வழங்குவதற்கான முயற்சிகளில் இளைஞர்களை ஈடுபடுத்தும்  முக்கியத்துவத்தை உணர்ந்து ரோட்டராக்ட் என அழைக்கப்படும் அதன் இளைஞர்களை ஒன்றிணைக்கத் தொடங்கியது. 1968ஆம் ஆண்டு 18முதல் 30வரையிலான இளைஞர்களை உள்வாங்கியது. தற்போது உலகளாவிய ரீதியில் 11ஆயிரம் ரோட்டராக்ட் கிளப்புகள் உள்ளன.

அவை   250,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.  

இலங்கையில் 1969செப்டம்பர் 9ஆம் திகதி ரோட்டரிக் கிளப் ஸ்தாபிக்கப்பட்டது. இதுவே ரோட்டராக்ட் கிளப் ஒப் கொழும்பு என்று அழைக்கப்பட்டது. இது இன்று ஐம்பது வருட சேவை நிறைவைக் கொண்டாடுகின்றது. சர்வதேச ரீதியில் 3220மாவட்டங்களைக் கொண்டது. இது உள்நாட்டில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ இளைஞர்களை கொண்டுள்ளதுடன், 70க்கும் மேற்பட்ட செயற்படும் கழகங்களை உள்ளடக்கியுள்ளது.

இந்த ஐம்பதாண்டு நிறைவை இலங்கையும் மாலைதீவும்கொண்டாடுகின்றன. இதன் இயங்கு தன்மையில் 'அனைவருக்கும் சிறந்த கல்வி', 'காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது', 'காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுதல்', 'அமைதி மற்றும் நீதி' ஆகியவற்றை உலகளாவிய முன்முயற்சிகளாக அங்கீகரிக்கிறது.

அவை உலக நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் முன்னுரிமைகளாக அங்கீகரிக்கப்படுகின்றன. இந்த பொன்விழா ஆண்டில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் சமாதானத்தை வளர்ப்பதிலும் அதிக கவனம் செலுத்துகின்றன. 

ரோக்டராக்ட் என்பது அனைவரையும் உள்ளடக்கிய இயக்கமாகும். அங்கு பல்வேறு பாலினங்கள், மதங்கள், இனங்கள், புவியியல் பின்னணியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று கூடி,  சேவையைச் செய்கிறார்கள்.

இலங்கையில் அமைதிக்கான தூதுவர்களாக இருக்கும் ரோட்டராக்டர்களின் பொறுப்பு உறுப்பினர்களால் புரிந்து கொள்ளப்படுகிறது.


Add new comment

Or log in with...