"இதற்குத் தானே ஆசைப்பட்டாய்" | தினகரன்


"இதற்குத் தானே ஆசைப்பட்டாய்"

கொழும்பில் நாடகங்கள் மேடையேறி நீண்ட காலமாகிறது. இந்த நீண்ட இடைவௌிக்கு பின்பு சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கக்கூடிய வகையில் சிலோன் யுனைட்டட்ஆட்ஸ் ஸ்டேஜ் குழுவினரும் லயன்ஸ் கிளப் ஒப் கோல்ட் சிட்டியினரும் இணைந்து "இதற்குத்  தானே ஆசைப்பட்டாய்" என்ற நகைச்சுவை நாடகத்தை எதிர்வரும் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30மணிக்கு கொழும்பு 13, விவேகானந்தா சபை மண்டபத்தில் மேடையேற்றப்படவுள்ளனர் .கொழும்பில் பல ஆண்டுகாலமாக மேடை நாடகங்கள் பலவற்றை மேடையேற்றி வெற்றி கண்ட சிலோன் யுனைட்ட் ஆட்ஸ் ஸ்டேஜ் அமைப்பு கே. செல்வராஜாவை தலைவராகக் கொண்டு இயங்குவதாகும். இதில் முன்னணி கலைஞர்களும் பழம் பெரும் நடிகர்களும் நடிகைகளும்  இணைந்து நடித்து வருகின்றனர்.

இந் நாடகத்திலும் பழம் பெரும் கலைஞர்கள் பலருடன் முன்னணி கலைஞர்களும் நடிக்கவுள்ளனர்.

 கலைஞர்களான நடிகர் எம்.கே.சுதாகர், கலாபூஷணம் ஜீ.ஜே.போல்ராஜ், தே.முனிவர், ஏ.வீரபுஸ்பநாதன், கலாபூஷணம் எஸ்.என்.நடராஜா, எஸ்.சரவணா, ஏ.சசிகுமார் அமுதவள்ளி,    சாந்தி பானுஷா, மார்கிரட், ஆகியோர் நடிக்கின்றனர்.  

ஒலி,  ஒளி அமைப்பு ராதா மேத்தா,இசை ஆறுமுகம் சந்திரதாஸ், ஒப்பனை எம். மனோஜ், மூலக்கதை, நெறியாள்கை கே.செல்வராஜன், தயாரிப்பு பொன். பத்மநாதன் , உதவி இயக்குனர் கே. ஈஸ்வரலிங்கம்.இந்த நாடகம் இலவசமாக காண்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 அமைச்சர் மனோ கணேசன் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் இந்நிகழ்வில்  மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே. டீ. குருசாமியும் கலந்து  சிறப்பிக்கவுள்ளார்.  

 


Add new comment

Or log in with...