அரச இலக்கிய விருது விழா | தினகரன்


அரச இலக்கிய விருது விழா

2019ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.

2018ஆம் ஆண்டில் தமது சிறந்த படைப்புக்களினால் இலக்கியத் துறைக்கு பங்களிப்பு வழங்கிய எழுத்தாளர்களின் சேவைகளை பாராட்டி இந்த அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கில மொழிமூல இலக்கியப் படைப்பாளர்கள் மூவருக்கு வாழ்நாளில் ஒரேயொரு தடவை மாத்திரம் வழங்கப்படும் “சாகித்ய ரத்னா’ கௌரவ விருது ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

 இதற்கிணங்க சிங்கள மொழிக்காக பேராசிரியர் வோல்டர் மாரசிங்க, தமிழ்மொழிக்காக ஐயாதுரை சாந்தன், ஆங்கில மொழிக்காக கமலா விஜயரத்ன ஆகியோருக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அரச இலக்கிய விருது விழாவில் சிறந்த சுய சிறுவர் இலக்கியத்திற்கான விருது “அம்மா கோழியும் அப்பா சேவலும்” நூலுக்காக செபமாலை அன்புராசாவுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த சுய இளையோர் இலக்கிய விருது “சாமி – தமிழ் அறம்” நூலுக்காக அருட்திரு ரி.எஸ். யோசுவா,

சிறந்த மொழிபெயர்ப்பு கவிதை இலக்கியத்துக்கான விருது “சுதந்திரம்” என்ற நூலுக்காக கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன், 

சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கிய விருது “மஹர தோரணம்” நூலுக்காக சாமிநாதன் விமல்

சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் இலக்கியத்திற்கான விருது “தாரா சியாமளி குமாரசாமி” என்ற நூலுக்காக அனுஷா சிவலிங்கம்,  சிறந்த மொழிபெயர்ப்பு நானாவித இலக்கிய விருது “மிகப்பெரும் ஆயுதக்களைவு” நூலுக்காக மு. பொன்னம்பலம்,

சிறந்த சுய நானாவித இலக்கியத்திற்கான விருது “எல்லாப்பூக்களுமே அழகுதான்” என்ற நூலுக்காக அ..ச. அகமட் கியாஸ்,

சிறந்த சுய புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்பு இலக்கியத்திற்கான விருது “இலங்கையில் முஸ்லிம் கல்வி – சாபி மரிக்கார் சிந்தனையும் பங்களிப்பும்” நூலுக்காக ஏ.எம். நஹியா,

சிறந்த சுய நாடக இலக்கியத்திற்கான விருது “மன வைரம்” நாடகத்துக்காக செல்லம் அம்பலவாணர்,

சிறந்த சுய கவிதை இலக்கியத்திற்கான விருது “முகிலெனக்கு துகிலாகும்” என்ற நூலுக்காக வ. வடிவழகையன்,

சிறந்த சுய சிறுகதை இலக்கியத்திற்கான விருது “கனவுலகம்” நூலுக்காக ஜுனைதா ஷெரீப், 

சிறந்த சுய நாவல் இலக்கியத்திற்கான விருது “அலுவாக்கரை” என்ற நூலுக்காக எஸ்.ஏ. உதயன்ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.

  'சாஹித்திய ரத்னா' வாழ் நாள் சாதனை'விருது ஐயாத்துரை சாந்தனுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பெர்னாட் வசந்த, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்ணான்டோ, இலங்கை கலா மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ஆரியரத்ன களுஆரச்சி, அரச இலக்கிய ஆலோசனை சபையின் தலைவர் பேராசிரியர் சமந்த ஹேரத் மற்றும் புத்திஜீவிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.     -

எல். செல்வா


Add new comment

Or log in with...