ஓமானுக்கு எதிரான கரப்பந்தாட்ட போட்டி: இலங்கை அணி வெற்றி | தினகரன்


ஓமானுக்கு எதிரான கரப்பந்தாட்ட போட்டி: இலங்கை அணி வெற்றி

ஈரான் தெஹ்ரான் நகரில் நடைபெறும் ஆசிய சிரேஷ்ட பிரிவு ஆண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளில் ஓமானுடனான போட்டியில் இலங்கை அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தனது வெற்றியை பதிவு செய்தது.

இதன் அடிப்படையில் கடந்த 17/9 ஆம் திகதி நடைபெற்ற கசகஸ்தான் உடனான போட்டியில் 3-1 என்ற சுற்றுக் கணக்கில் வெற்றி பெற்ற இலங்கை அணி கடந்த (18/9) ஓமானுடன் நடைபெற்ற போட்டியிலும் இலங்கை அணி 33/31, 25/19, 23/25 மற்றும் 25/23 என்ற சுற்றுக் கணக்கில் வெற்றி பெற்றதுடன் இரு அணிகளும் உலக கரப்பந்தாட்ட தரப்படுத்தல் வரிசையில் 131 வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறை சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...