SME களுக்கு பொதியிடல் உதவி | தினகரன்


SME களுக்கு பொதியிடல் உதவி

BMICH இல் கடந்த 12ஆம் 13ஆம் திகதிளில் நடைபெற்ற LANKAPAK 2019கண்காட்சியில் சுமார் 40இந்திய நிறுவனங்கள் பங்கேற்கின்றன, இதற்கு PHD இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஆதரவு அளித்தது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக , நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தல், கூட்டுறவு மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் கடந்த 12ஆம் திகதி இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.   சர்வதேச வர்த்தகத்தில் அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் செய்வதன் முக்கியத்துவத்தை பதியுதீன் எடுத்துரைத்தார். பெக்கேஜிங் செய்வதற்கான நவீன முறைகள், குறிப்பாக உணவு மற்றும் பானங்களை பொதி செய்வதில் பயன்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பெக்கேஜிங் துறையில் சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் பேசினார். மதிப்புச் சங்கிலிகளை வலுப்படுத்த பல்வேறு நாடுகளில் உள்ள SME களில் அதிக ஒத்துழைப்பு வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அண்மையில் இலங்கையில் நடந்த கண்காட்சிகளில் இந்திய நிறுவனங்கள் பெருமளவில் பங்கேற்றது குறித்து உயர் ஸ்தானிகர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், இது ‘அருகாமை’ யை மட்டுமல்ல, இருநாடுகளுக்குமிடையிலான ‘நெருக்கத்தை’ யும் காட்டுகின்றது. பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் கவர்ச்சிகரமான பெக்கேஜிங்கின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், நமது சுற்றுச்சூழலின் நிலைபேண் தகமைக்கு , அதன் தாக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது என்று குறிப்பிட்டார். 

ஒற்றபை் பிளாஸ்திக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய திட்டத்தை நினைவூட்டிய இந்தியத் தூதுவர்,  காகிதம், துணி மற்றும் பிற மாற்றுப் பொருள்களை ப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றார்.

இலங்கை இன்ஸ்டிடியூட் ஆப் பெக்கேஜிங் தலைவர் அனுராத ஜெயசிங்க, ஆசிய பெக்கேஜிங் சம்மேளனத்தின் தலைவர் ரோஹன் விக்டோரியா, சி.டி.சி இவென்ட்ஸ் (பிரைவேட் லிமிடெட்) முகாமைத்துவப் பணிப்பாளர், இம்ரான் ஹசன் மற்றும் PHD இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளன செயலாளர் ராகேஷ் சாரங்கி ஆகியோர் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...