வோர்னர் பிரதர்ஸுடன் பங்குதாரராகிறது எலிபன்ட் ஹவுஸ் | தினகரன்


வோர்னர் பிரதர்ஸுடன் பங்குதாரராகிறது எலிபன்ட் ஹவுஸ்

இலங்கையில் பிரபலமானதும், சகல வீடுகளிலும் பயன்படுத்தப்படும் ஐஸ்கிறீமின் வர்த்தக நாமத்தைக் கொண்ட எலிபன்ட் ஹவுஸ், வோர்னர் பிரதர்ஸுடன் வரலாற்று ரீதியான பங்குதாரராகி மற்றுமொரு எல்லையைத் தொட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது நாட்டின் துரிதமாக நகரும் நுகர்வுப் பொருட்கள் தொழிற்துறையை புரட்சிகரமான பாதையில் புரட்டிப்போட்டு புதிய வாய்ப்புக்களுக்கான ஆரம்பமாக அமைந்துள்ளது. 

பாரிய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள உள்ளூர் நிறுவனமொன்று சர்வதேச ரீதியில் இந்தளவு மட்டத்தில் பங்காண்மையொன்றை ஏற்படுத்தியதன் ஊடாக துரிதமாக நகரும் நுகர்வுப் பொருட்கள் துறையில் புதிய வரலாறொன்றை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய பங்கான்மையின் ஊடாக எலிபன்ட் ஹவுஸ் சிறுவர்களால் பெரிதும் விரும்பப்படும் பபிள்கம் சுவையிலான Superman BubbleGummy மற்றும் கேக் சுவையிலான Wonder Woman Ice Cake ஆகிய இரு உற்பத்திகளை அறிமுகப்படுத்துகிறது.  

உலகளாவிய ரீதியில் பிரபலமான பொழுதுபோக்கு நிறுவனமான வோர்னர் பிரதர்ஸ் புகழ்பூத்த ‘டி.சி கொமிக்ஸ்’ வரைகதை வெளியீட்டகத்தின் உரிமையைக் கொண்டுள்ளது. இவர்கள் உருவாக்கிய ஜஸ்டிஸ்லீக் திரைப்படங்கள் பொழுதுபோக்கு தொழில்துறையை புதிய பரிமாணத்துக்கு எடுத்துச் சென்ற  இந்நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள பங்காண்மையானது, இலங்கையர்களுக்குப் பிடித்தமான ஐஸ்கிறீம் வர்த்தகமாநமான எலிபன்ட் ஹவுஸை ஜஸ்டிஸ்லீக் திரைப்படங்களில் உள்ள சுப்பர் ஹீரோக்களான சுப்பர்மான், பட்மான், வொண்டர் மான், ப்ளாஷ், அக்குவாமான் போன்ற ஹீரோக்கள் அளவுக்கு விருப்பத்தை ஏற்படுத்துவதாக அமையும்.  

நுகர்வோரின் மாற்றமடையும் சுவைகளுக்கு ஏற்ப சகலரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் ஐஸ் கிறீம்களை வழங்குவதில் எலிபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீம் பல்வேறு வழிகளைப் பின்பற்றி வருகிறது.

இந்த அடிப்படையில் புதிய பங்காண்மையானது நவீன நுகர்வோருக்குப் பரந்துபட்டளவில் மதிப்புக்களைப் பகிர்ந்துகொள்வதாகவும், உள்ளுார் சந்தைக்கு அற்புதமான மற்றும் சிறந்த ஐஸ்கிறீம்களை வழங்கும்.  “எலிபன்ட் ஹவுஸ் சாதாரணமான மற்றுமொரு ஐஸ்கிறீம் நாமம் அல்ல. நுகர்வோரின் இதயத்துக்கு நெருக்கமானது என்பதுடன், அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கு தொடர்ந்தும் ஆக்கபூர்வமான மற்றும் மகிழ்ச்சியான வாய்ப்புக்களை ஏற்படுத்தி வருகின்றோம். இந்த பங்கான்மையானது எமது ஐஸ்கிறீமை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதுடன், சர்வதேச ஐஸ்கிறீம் வர்த்தகநாமங்களுடனும் இணைத்துக்கொள்ளும். ” என துறையின் தலைவர் தெரிவித்தார். 


Add new comment

Or log in with...