இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது | தினகரன்


இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர் கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச,  ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.   

மாணவர் அனுமதிக்கு 50 ஆயிரம் ரூபா கையூட்டுப் பெற்றுக்கொண்டதற்கான உரிய ஆதாரத்துடன் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையூட்டுப் பெற்றுக்கொண்ட போதிய ஆதாரங்களுடன் இன்று நண்பகல் அவர் கைது செய்யப்பட்டார் என்று ஆணைக்குழுவால்,வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

(யாழ்.விசேட நிருபர்- மயூரப்பிரியன்)

 


Add new comment

Or log in with...