புலிகளால் நடப்பட்ட தேக்கு மரங்கள் அழிப்பு | தினகரன்


புலிகளால் நடப்பட்ட தேக்கு மரங்கள் அழிப்பு

வன இலாகாவை குறைகூறும் மக்கள் 

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினால் நாட்டப்பட்ட பயன் தரும் பல தேக்குமரங்கள் வன இலாகா திணைக்களத்தினரால் கனரக வாகனங்கள் எடுத்துவரப்பட்டு தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

நேற்று பன்றிக்கெய்தகுளம், ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராம அலுவலகர் பிரிவிலுள்ள மரையடித்தகுளம், இந்தியன் வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள இரண்டு ஏக்கர் பாரிய தேக்க காட்டிற்குள் சென்ற வன இலாகா திணைக்கள உத்தியோகத்தர்கள் பாரிய தேக்கு மரங்களைத் தறித்து வருகின்றனர்.  

பன்றிக்கெய்தகுளம் பகுதியில் 20முதல் 30வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டப்பட்டு பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த பயன் தரும் பல தேக்கு மரங்களே இவ்வாறு அங்கிருந்து வன இலாகா திணைக்களத்தினால் தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன. 

இதையடுத்து அப்பகுதியில் ஒன்றிணைந்த பொதுமக்கள் வன இலாகாவினரிடம் இது குறித்து கேட்டபோது,  

வன இலாகா திணைக்களத்திற்குச் சொந்தமான பகுதியிலுள்ள தேக்கு மரங்களே இவ்வாறு தறிக்கப்பட்டு வருகின்றன. பெரிய மரங்கள் தறிக்கப்பட்டு புதிய மரங்கள் நாட்டுவதற்காகவே பழைய மரங்கள் இவ்வாறு தறிக்கப்பட்டு வருவதாக அங்கு சென்ற வன இலாகா திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா விசேட நிருபர்  வவுனியா விசேட நிருபர்  


Add new comment

Or log in with...