அரச நியமனம் புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் | தினகரன்


அரச நியமனம் புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் சிலர் நேற்று காலை முதல் மழைக்கு மத்தியிலும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். 

பட்டதாரிகள் நியமனத்தின் போது தங்களுடைய நியமனங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் இதுவரை வேலை வாய்ப்புகள் கிடைக்காத வர்களும் வெளிவாரி பட்டங்களை பெற்ற சிலரும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர். 

தமது போராட்டத்திற்கு 48மணித்தியாலத்திற்குள் நிரந்தர தீர்மானம் இல்லையெனில் தீக்குளிப்போம் என்று பதாகைகளை தாங்கியவாறு குறித்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், திருச்செல்வம் ரவீந்திரன், ரத்தினம் ஜெகதீஸ்வரன், அண்டனி ரங்க துசார, காமினி திசாநாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் போராட்டத்திற்கு ஆதரவாக கலந்துகொண்டிருந்தனர். 

மாங்குளம் குறூப் நிருபர்  


Add new comment

Or log in with...