பசுவை திருடி நிறம் மாற்றி விற்றவர் கைது | தினகரன்

பசுவை திருடி நிறம் மாற்றி விற்றவர் கைது

திருடப்பட்ட பசுவொன்று வர்ணம் தீட்டப்பட்டு இறைச்சிக் கடை ஒன்றுக்கு விற்பனை செய்த நபரொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும்  பசுவையும் மொனராகலைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மொனராகலை பக்கினிகாவெலை என்ற இடத்தில் அமைந்திருக்கும் இறைச்சிக் கடையொன்றிலிருந்து பசுவை மீட்டனர். குறிப்பிட்ட பசுவின் உடம்பில் இடைக்கிடை வெள்ளை நிறத்தோல் தெரிந்துள்ளது இதனையடுத்து இதுதொடர்பில் ஆராய்ந்த போது  வெள்ளை பசுவுக்கு கறுப்பு வர்ணம் தீட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பசுவின் உரிமையாளர் மொனராகலைப் பொலிஸாக்கு செய்த புகாரில் தமது பசுவின் பெறுமதி எழுபத்தையாயிரம் ரூபாவென்று குறிப்பிட்டு அதன் அடையாளங்களையும் தெரிவித்திருந்தார். அதற்கமையவே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.  சந்தேகநபரை மொனராகலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதுளை தினகரன் விசேட நிருபர்       


Add new comment

Or log in with...