இரத்தினபுரியில் மண் சரிவு எச்சரிக்கை | தினகரன்


இரத்தினபுரியில் மண் சரிவு எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிப்படைந்துள்ளதோடு, மண்சரிவு அபாயநிலையும் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இரத்தினபுரி, எஹலியகொடை, குருவிட்ட, கிரியெல்ல, பலாங்கொடை, களவான ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்களை அவதானத்தடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து  பெய்து வரும் அடை மழை காரணமாக தோட்டத்தெழிலாளர்களின் இயல்புநிலை முற்றாக பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக தோட்டப் பகுதிகளில் இறப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் மற்றும் தோட்டப்புற, கிராமபுறங்களில் இருந்து நகர பகுதிகளுக்கு வரும் பாடசாலை மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் சில தோட்டப் பகுதிகளின் வீதிகளில் மண் திட்டுக்கள், மரங்கள் சரிந்து விழுந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

காவத்தை தினகரன் விசேட நிருபர்


Add new comment

Or log in with...