மூன்று ஆலயங்கள் உடைத்து கொள்ளை | தினகரன்


மூன்று ஆலயங்கள் உடைத்து கொள்ளை

பொகவந்தலாவ பகுதியில் மூன்று ஆலயங்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 

பொகவந்தலாவ ரொப்கில் வானகாடு தோட்டப்பகுதி ஸ்ரீ  முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும்  டிக்கோயா சாஞ்சிமலை  கீழ் பிரிவில் உள்ள இராமர் ஆலயம் மற்றும் டிக்கோயா பொயிஸ்டன் ஆகிய தோட்டப்பகுதி ஆலயங்கள் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கபட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, அம்மன் கழுத்தில் இருந்த தாலி  மற்றும் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் என்பன திருடப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ மற்றும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

  நேற்று அதிகாலை ஒரு மணிக்கும் நான்கு மணிக்கும் இடைப்பட்ட    காலப்பகுதியில் இந்த திருட்டு சம்பவம்  இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதே வேளை பொகவந்தலாவ வானகாடு தோட்டப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றும் உடைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. தோட்ட தொழிற்சாலைகளில் பொருத்தபட்டுள்ள சீ. சீ. டிவி.

 கேமராவின் ஊடாக விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்


Add new comment

Or log in with...