நிந்தவூரில் அங்காடி வியாபாரத்திற்கு தடை | தினகரன்


நிந்தவூரில் அங்காடி வியாபாரத்திற்கு தடை

நிந்தவூர் பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட மாந்தோட்ட சந்தி, அலியான் சந்தி மற்றும் நிந்தவூர் பிரதான வீதி ஆகியவற்றில் அனுமதியற்ற முறையில் நடைபெறும் அங்காடி வியாபார நடவடிக்கைகளை இன்று (20 )முதல் நிறுத்துவதற்கு நிந்தவூர் பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது.  

குறிப்பிட்ட இடங்களில் நடைபெறும் இவ்வியாபார நடவடிக்கைகளால் வீதியால் பயணிக்கும் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதுடன், வீதி விபத்துக்களையும் சந்தித்து வருகின்றனர்.

 இந்தப் பகுதிகளில் தற்போது வியாபார நடவடிக்கைகள் களை கட்டியுள்ளதனால் இங்கு விற்பனை செய்யப்படும் மீன் மற்றும் இதர பொருட்களின் கழிவுகளை மிருகங்களும், பறவைகளும் பொது மக்களின் வீடுகளில் போட்டு சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றது. இந்நிலையிலேயே பிரதேச சபையானது குறிப்பிட்ட இடங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட இன்று முதல் தடைவிதித்துள்ளதுடன், இனிவரும் நாட்களில் பிரதேச சபையால் அமைக்கப்பட்டுள்ள பொதுச் சந்தையில் மாத்திரம் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவித்தல் விடுத்துள்ளது.  

இவ்வறிவித்தலினைக் கருத்திற் கொள்ளாது குறிப்பிட்ட இடங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கெதிராக நீதி மன்றில் வழக்குத் தொடரப்படுமெனவும் அறிவித்தல் விடுத்துள்ளது.  

நிந்தவூர் குறூப் நிருபர்  


Add new comment

Or log in with...