தேர்தலை வைத்து மஹிந்த சார்பு சங்கங்கள் போராட்டம் | தினகரன்


தேர்தலை வைத்து மஹிந்த சார்பு சங்கங்கள் போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்- மஃறூப்

தேர்தலை இலக்காகக் கொண்டு மஹிந்த சார்பான தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றன என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்- மகரூப் தெரிவித்தார். 

 நேற்று  (19)  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே  இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,நேற்று நாடு முழுவதும் பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. 

இந்த போராட்டங்களின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ்வே உள்ளார்.

தேர்தல் காலங்களில் நாட்டில் குழப்பங்களை தூண்டிவிட்டு இவர்கள் வாக்கு சேகரிக்க முயற்சி செய்கின்றனர். 

இன்று தொழிற்சங்கங்கள் சுதந்திரமாக தமது போராட்டங்களை முன்னெடுத்துச் செலல்வதற்கான சுதந்திரத்தைநாமே வழங்கியது.

கடந்த ஆட்சியில் இவ்வாறான போராட்டங்கள் நடைபெற்றால் அடுத்தநாள் அவர்களின் வீடுகளுக்கு வெள்ளை ோன் வந்த வரலாறே காணப்பட்டது.  

ஆயிரம் ரூபாவாவது உயர்த்தி தாருங்கள் என கேட்கும் வல்லமை கடந்த அரசின் காலத்தில் இந்த தொழிசங்கங்களுக்கு இருக்கவில்லை. 

 நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.  

அடுத்துவரும் ஓரிரு நாட்களில் ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழு இணைந்து வெற்றிபெறும் வேட்பாளரை தெரிவு செய்யும். இவர்கள் என்ன குழப்பங்கள் செய்தாலும் நாம் பெயரிடும் வேட்பாளர் நவம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்பது உறுதி என தெரிவித்தார். 

திருமலை மாவட்ட விசேட, கந்தளாய் தினகரன் நிருபர்கள் 


Add new comment

Or log in with...