2009 இல் அங்கவீனமான படையினர் பிரச்சினை ஏன் தீர்க்கவில்லை | தினகரன்


2009 இல் அங்கவீனமான படையினர் பிரச்சினை ஏன் தீர்க்கவில்லை

எதிரணியிடம் அமைச்சர் கிரியெல்ல கேள்வி

யுத்தம் 2015இல் அன்றி 2009இல் தான் நிறைவடைந்தது.2009-2015காலத்தில் ஏன் அங்கவீனமுற்ற படைவீரர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று முன்தினம் எதிரணியிடம் கேள்வி எழுப்பினார்.  

அங்கவீனமுற்ற படைவீரர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் போராட்டம் தொடர்பில் எதிரணி எம்.பிக்கள் சபையில் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த விமல் வீரவங்ச எம்.பி முதலில் இது தொடர்பில் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனை தொடர்ந்து எம்.பிகள் பலரும் கருத்து வெளியிட்டார்கள்.  

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த விமல் வீரவங்க எம்.பி 

100ற்கும் அதிகமான அங்கவீனமுற்ற படைவீரர்கள் 9ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டாலும் நிதி அமைச்சர் கால அவகாசம் கோரியுள்ளார். இது தொடர்பில் தீர்வு காண வேண்டும் என்றார்.  

சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல கருத்து தெரிவிக்கையில்,படைவீரர்கள் தொடர்பில் முக்கியமாக செயற்பட வேண்டும். இது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்பட்டது.அடுத்தவாரம் இது தொடர்பில் பதில் வழங்கப்படும் என்றார்.  

ரதன ​தேரர் கூறுகையில், 

அங்கவீனமுற்ற படைவீரர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜனாதிபதியினால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டாலும் நிதி அமைச்சர் கால அவகாசம் கேட்டுள்ளார். படைவீரர்கள் தற்கொலை செய்ய தயாராகின்றனர். இனியும் காலங்கடத்தாது அவசரமாக தீர்வு காண வேண்டும் என்றார்.  

சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகையில்,யுத்தம் 2009 இல் தான் நிறைவடைந்தது.2009 முதல் 2015 வரை என்ன செய்தீர்கள் என்றார்.  

ஷம்ஸ் பாஹிம், லக்ஷ்மி பரசுராமன்  


Add new comment

Or log in with...