அதிகாரம் ஒழிக்கும் அரசின் திட்டம் முறியடிக்கப்படும் | தினகரன்


அதிகாரம் ஒழிக்கும் அரசின் திட்டம் முறியடிக்கப்படும்

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சதித்திட்டங்களை முறியடித்து கோட்டாபய ராஜபக்ஷவை இந் நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

நடத்தப்பட்டுள்ள அனைத்துக் கருத்துக் கணிப்புகளிலும் கோட்டாபய ராஜபக்ஷவே வெற்றிபெறுவார் என ஊர்ஜிதமாகியுள்ளது. ஆகவே, மீண்டும் அரசியலமைப்பு விளையாட்டுகளை போட வேண்டாமெனவும் எச்சரிக்கை விடுத்தார். 

பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வை வழங்க வேண்டுமென வலியுறுத்திய ஜே.வி.பி கொண்டுவந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

கல்விசாரா ஊழியர்கள், அரச நிர்வாக சேவையினர், உபாதைகளுக்கு உள்ளான இராணுவத்தினர் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அரசாங்கத்தை விரட்டியக்கும் தருணத்தையும் புதைக்குழிக்குள் தள்ளிவிடும் தருணத்தையும் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன் 


Add new comment

Or log in with...