ஜனாதிபதி பதவிக் கால வியாக்கியானம் கோர சட்ட தடையில்லை | தினகரன்


ஜனாதிபதி பதவிக் கால வியாக்கியானம் கோர சட்ட தடையில்லை

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட போதும் தனது பதவிக் காலம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோர ஜனாதிபதிக்கு எந்தவித சட்டரீதியான தடையும் கிடையாது என சுதந்திரக் கட்சி பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் சு.க விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தனது பதவிக்காலம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறிய தயாராவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை தொடர்பாக வினவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில், இது தொடர்பில் நாமும் கேள்வியுற்றோம். ஆனால் எம்முடன் ஜனாதிபதி இது பற்றி கலந்துரையாடவில்லை. ஆனால் அவருக்கு உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோர எந்த சட்டச் சிக்கலும் கிடையாது.

அதற்கான வாய்ப்பு அவருக்கு இருக்கிறது.தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டிருப்பதால் எந்த பாதிப்பும் எழாது என்றார்.

இதேவேளை கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் தனது பதவிக்காலம் 6 வருடங்களா? 5 வருடங்களா? என ஜனாதிபதி உச்ச நீதிமன்ற வியாக்கியானத்தை வினவியிருந்தார். ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளே என, உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தது.(பா)

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...