ரயில் சமிக்ஞைகளில் கோளாறு; புகையிரதங்கள் தாமதம் | தினகரன்


ரயில் சமிக்ஞைகளில் கோளாறு; புகையிரதங்கள் தாமதம்

சட்டப்படி வேலை தொழிற்சங்க போராட்டத்தில் ஊழியர்கள்

கொழும்பு, புறக்கோட்டை மற்றும் மருதானை ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரத சமிக்ஞை கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு (20) முதல் புகையிரத ஊழியர்கள் சட்டப்படி வேலை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புகையிரத சாரதிகள், பொறியியலாளர்கள், புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகள்,புகையிரத மேற்பார்வை முகாமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் இந்த தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களது பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளினால்  தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் 24 ஆம் திகதி கால வரையறையின்றிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, புகையிரத எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...