வத்தளையிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் தீ | தினகரன்

வத்தளையிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் தீ

கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்து நெரிசல்

வத்தளை, ஹேகித்த சந்திக்கு அருகிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (20) அதிகாலை 6.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று மாடிக் கட்டிடமொன்றிலேயே இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வத்தளை நகர சபை, கொழும்பு மா நகரசபை தீயணைப்பு படை, பேலியகொடை நகர சபையின் தீயணைப்பு படை மற்றும் வெலிசர கடற்படை முகாமின் அதிகாரிகள் ஆகியோர் வத்தளை பொலிசாருடன் இணைந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத் தீ விபத்தை தொடர்ந்து கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  


Add new comment

Or log in with...