பொலிஸ் ஆணைக்குழுவின் செயலர் கைது | தினகரன்


பொலிஸ் ஆணைக்குழுவின் செயலர் கைது

அவன்கார்ட் ஆயுதக் களஞ்சியசாலை வழக்கு சம்பந்தமாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (18) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் சென்றமை தொடர்பாக தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி, தேசிய  பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்கவினால் விடுக்கப்பட்ட முன் பிணை மனு, கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்கவினால் நேற்றையதினம் (17) நிராகரிக்கப்பட்டது.

அவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்தின் (Avant Garde Maritime) தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, தேசிய  பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களையும் உடனடியாக  கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு, சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா கடந்த வெள்ளிக்கிழமை (05) அறிவித்திருந்தார்.  


Add new comment

Or log in with...