மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு அருகில் பழங்கால கட்டடங்கள் | தினகரன்


மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு அருகில் பழங்கால கட்டடங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கருகில் பழங்கால மண்டமும் தூண்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பழைய மத்திய சந்தையை அப்புறப்படுத்திவிட்டு பல அடுக்கு வாகனத் தரிப்பிடம் கட்டப்படவுள்ளது.இதற்காக இவ்விடத்தில் அகழ்வுப் பணிகளை ஆரம்பித்த போது பூமிக்கடியில் பழங்கால மண்டபமும் தூணும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் அருகில் பழைய மத்திய மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் 2.03 ஏக்கரில் தரை தளத்திற்கு கீழ் இரண்டு தளங்களுடன் கூடிய வாகனத் தரிப்பிடம் ரூ.40.19 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வாகனத்தை நிறுத்தும் முதலாவது கீழ்தளத்தில் 118 கார்கள், 416 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும். இரண்டாவது கீழ்தளம் 1,185 இருசக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடியவாறு நிர்மாணிக்கப்படுகிறது.

இதேபோன்னு 2-வது வாகன நிறுத்தத்தின் முதல் கீழ்தளத்தில் 371 கார்கள், 2-வது கீழ்தளத்தில் 4,776 இருசக்கர வாகனங்களையும் நிறுத்த முடியும்.

சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்பாடு அமைப்புகள் மற்றும் புராதன மேம்பாட்டு செயல்பாடுகளுக்காக தரைத்தளத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போதிய தீயணைப்பு வசதிகள், சூரிய சக்தியுடன் கூடிய அவசரகால மின் விநியோம், தகவல் ஒளிபரப்பு சாதன வசதிகள் எனப் பல்வேறு வசதிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...