ஸ்டாலின் தலைமையில் திமுகவின் முதலாவது பொதுக்குழு கூட்டம் | தினகரன்


ஸ்டாலின் தலைமையில் திமுகவின் முதலாவது பொதுக்குழு கூட்டம்

தி.மு.க. தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன் முதலாக கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.எதிர் வரும் (06) ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் காலை 10 மணிக்குஇக்கூட்டம் நடைபெறுமென, க.அன்பழகன் தெரிவித்தார். கழக ஆக்கப்பணிகள், கழக சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை தொடர்பாக இப்பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; எதிர்வரும் அக்டோபர் (06) திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை ஒய்எம்சிஏ திடலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். இதில் கட்சியின் சட்ட திட்டத் திருத்தம், ஆக்கப்பணி, தணிக்கை குழு அறிக்கை, உள்ளூராட்சி தேர்தல் பணிகள், உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.கடந்த வருடம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடந்த பொதுகுழு கூட்டத்தில் ஸ்டாலின் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

அவர் தலைவராக பொறுப் பேற்றபின் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பதால் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது சென்னை


Add new comment

Or log in with...