ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைவு | தினகரன்


ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைவு

புதுடெல்லி: பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்ததால், அக்கட்சியின் பல்வேறு மாநிலத் தலைவர்கள், பொறுப்பாளர்கள், தோல்விக்குப் பொறுப்பேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் அஜோய் குமாரும் தனது பதவியை ராஜினாமாச் செய்திருந்தார்.

இந்நிலையில், நேற்று புதுடில்லி வந்த அஜோய் குமார், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சந்தித்து அவரது முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து கொண்டார். அவரை மணிஷ் சிசோடியா மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஜோய் குமார் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...