கோட்டாபயவுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது | தினகரன்


கோட்டாபயவுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

கோட்டாபயவுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது-Gotabaya's Deposit for the Presidential Eelection Paid

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (SLPP) சார்பில் ஜனாதிபதித் தேர்தலுக்காக முன்னிறுத்தப்பட்ட வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கான கட்டுப்பணம், ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் செலுத்தப்பட்டது.

இது தொடர்பில் அக்கட்சியின் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் மற்றும் அக்கட்சியின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோட, அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 07 ஆம் திகதி கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் 75 ஆயிரம் ரூபாவும் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவும் கட்டுப் பணமாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று (19) மாலை வரை இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் ஓர் அரசியல் கட்சியுமாக மூவர் கட்டுப்பணம் செலுத்தியிருந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தினகரனுக்குத் தெரிவித்திருந்தார்.

இலங்கை சோசலிஷக் கட்சியின் வேட்பாளரும் மேலும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்களுமே இவ்வாறு கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...