ஒப்சேர்வர் - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் விருது நாளை | தினகரன்


ஒப்சேர்வர் - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் விருது நாளை

2019 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த கிரிககெட் நட்சத்திரத்தை தெரிவு செய்யும் போட்டி மொபிடெல்- ஒப்சேர்வர் அனுசரணையில் 41 ஆவது ஆண்டாகவும் நடத்தும் போட்டி நாளை 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவான அநேகமான சிரேஷ்ட வீரர்களை உருவாக்குவதற்கும் அடையாளப்படுத்துவதற்கும் அளப்பரிய நான்கு தசாப்தகால பங்களிப்பை வழங்கி வரும் சன்டே ஒப்சேர்வர் இந் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் இவ்வருடம் தெரிவு செய்யும் கிரிக்கெட் நட்சத்திரத்தை இலங்கை வாழ் கிரிக்கெட் அபிமானிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முதலாவதாக தெரிவான கிரிக்கெட் நட்சத்திரம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் (1996) உலக கிண்ணத்தை வென்றெடுத்த அணியின் தலைவருமான அர்ஜுன ரணதுங்க ஆவார்.மேலும் சர்வதேச புகழ்பெற்ற கிரிக்கெட் போட்டி மத்தியஸ்தர் ரஞ்சன் மடுகல்ல கிரிக்கெட் நட்ச த்திரங்களான ரோஷான் மஹானாம, திலான் சமரவீர, பானுக, ராஜபக்ஷ, ஹசித போயகொட, லஹிரு பீரிஸ் சரித் அகலங்க ஆகியோரும் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஏனைய கிரிக்கெட் வீரர்கள் ஆவர்.     


Add new comment

Or log in with...