ரயிலில் சிக்குண்டு ஒருவர் பலி | தினகரன்


ரயிலில் சிக்குண்டு ஒருவர் பலி

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் சிக்குண்டு ஒருவர்   ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக, வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும்,  அவ்வேளையில், பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே எனும் புகையிரதத்தில் சிக்குண்டு அவர் பலியாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எனினும்,  குறித்த நபர் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம்  வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை  வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் ஜி.கே. கிருஷாந்தன்)      


Add new comment

Or log in with...