நீண்ட நாள் பதவி உயர்வின்றிய 31,000 பொலிஸாருக்கு பதவி உயர்வு | தினகரன்


நீண்ட நாள் பதவி உயர்வின்றிய 31,000 பொலிஸாருக்கு பதவி உயர்வு

நீண்ட நாள் பதவி உயர்வின்றிய 31,000 பொலிஸாருக்கு பதவி உயர்வு-

நீண்ட காலமாக பதவியுயர்வு கிடைக்கப் பெறாதிருந்த 31,000 பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு பதவியுயர்வு வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் சமர்ப்பிக்கப்பட்ட பதவியுயர்வு முன்மொழிவுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு, சம்பளம் மற்றும் ஊழியர் எண்ணிக்கை ஆணைக்குழு மற்றும் நிதியமைச்சின் முகாமைத்துவச் சேவை திணைக்களம் ஆகியவற்றின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்த வகையில் 2019-01-01, 2020-01-01 மற்றும் 2021-01-01 ஆகிய மூன்று பிரிவுகளுக்கான அதிகாரிகளின் சிரேஷ்டத்துவம் கருத்திற்கொள்ளப்பட்டு பதவியுயர்வு வழங்க முன்மொழியப்பட்டதுடன், 2019 ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில்,பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் பரிசோதகர் பதவி வரையிலான அதிகாரிகள் உள்ளிட்ட முதலாவது பிரிவைச் சேர்ந்த 5,824 பேருக்கு குறித்த பதவியுயர்வு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...