கிழக்கு தொண்டர் ஆசிரியர்கள் ஆளுநர் அலுவலகம் முன்னால் | தினகரன்


கிழக்கு தொண்டர் ஆசிரியர்கள் ஆளுநர் அலுவலகம் முன்னால்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில்  நேற்று (18) பாதிக்கப்பட்ட  தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமன் வழங்க கோரி கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.  

2018ஆம் ஆண்டு நேர்முக பரீட்சைக்கு பின் "கிழக்கில் பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்கு அரசே" என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. 

2018ம் ஆண்டு நேர்முகப் பரீட்சையில் பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும். இதற்கான நிபந்தனைகளாக 2018நேர்முக பரீட்சையில் தெரிவு செய்து சிறிய சிறிய ஆவணங்களை சமர்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி மீண்டும் நேர்முகப்பரீட்சை நடாத்தி நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

(ரொட்டவெவ குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...