இன்னும் 875 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட வேண்டும் | தினகரன்


இன்னும் 875 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட வேண்டும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சியினால் வடக்கின் பெருமளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இன்னும் 551 ஏக்கர் அரச காணியும் 324 ஏக்கர் தனியார் காணியுமே விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். 

நேற்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தினல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

2009- - 2014 ஆண்டு காலத்தில் 21, 073 ஏக்கர் அரச காணியும் 19,989 ஏக்கர் தனியார் காணியும் விடுவிக்கப்பட்டது. அத்துடன் 2015- 2019 காலப் பகுதியில் 42,247 ஏக்கர் அரச காணியும் 5,958 ஏக்கர் தனியார் காணியும் விடுவிக்கப்பட்டது.   

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்   


Add new comment

Or log in with...