நந்திக்கடல் வற்றியுள்ளதால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு | தினகரன்


நந்திக்கடல் வற்றியுள்ளதால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

முல்லைத்தீவு நந்திக்கடல் வற்றியுள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிலவும்வரட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுகடற்பகுதியான நந்திக்கடல்  வற்றியுள்ளது. இந்நிலையில், நந்திக்கடலை நம்பிவாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  முற்றாக தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர்.

குறித்த கடற்பகுதியானது கடந்த ஆழிப்பேரலை அனர்த்தம் மற்றும் வெள்ளப்பாதிப்புக்கள் காரணமாக கழிவுகள்,மண் என்பன நிரம்பி ஆழம்குறைவடைந்துள்ளது என்றும் நந்திக்கடல் பகுதிகளில் காணப்படும் கழிவுகளை அகற்றி துப்புரவு செய்துதருமாறு கடற்றொழிலாளர்களினால்தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அதற்கான நிதியொதுக்கீடுகள் கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்றபோதும் இயற்கை ஒதுக்கீடமாக பிரகடனப்படுத்தப்பட்டு அதனை புனரமைப்பதற்கான தடைகளை வனஜீவராசிகள் திணைக்களம் விதித்தமையால் மேற்படி நிதியொதுக்கீடுகள் திரும்பிச்சென்றுள்ளன என்றும் மீனவர்கள்தெரிவித்துள்ளனர்.

நந்திக்கடல்துப்புரவு செய்து ஆழப்படுத்தப்படாமையினால் வருடாந்தம் குறிப்பிட்ட சில மாதங்களில் நீர்வற்றி விடும் என்றும் இதனால் தமது தொழில்கள் முழுயாகவே பாதிக்கப்படுகின்றது எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

(பரந்தன் குறூப் நிருபர்– யது பாஸ்கரன்)

 


Add new comment

Or log in with...