வரிகளை அதிகரிக்காமல் வருமானம் திரட்டும் அறிவு அரசுக்கில்லை | தினகரன்


வரிகளை அதிகரிக்காமல் வருமானம் திரட்டும் அறிவு அரசுக்கில்லை

வரியை அதிகரிக்காமல் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டங்கள் பற்றி இந்த அரசாங்கத்துக்கு எதுவும் தெரியாதென பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன விசனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவின் ஆட்சிக்காலத்தில் அறவிடப்பட்டு வந்த வரி தற்போது நாட்டுக்கு வருமானம் சேர்க்கும் பேரில் நூற்றுக்கு நூறு வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதென்றும் அவர் கூறினார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பந்துல குணவர்தன எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து கூறியதாவது-

2019ஆம் ஆண்டுக்கான குறை நிரப்பு பிரேரணை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது 2 232பில்லியன் ரூபாவை அங்கீகரிக்கும் வகையிலேயே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் வரி மற்றும் வரி அல்லாத வகையில் வருமானத்தை தேடிக்கொள்ள வேண்டும்.

மார்ச் 05ஆம் திகதியன்றே நிதியமைச்சர் வருமானம் திரட்டும் வழிகள் குறித்த தமது யோசனைகளை முன்வைப்பார். இந்த அரசாங்கம் வருமானம் தேடுவதாகக் கூறிக்கொண்டு நேரடி மற்றும் மறைமுகமாக வரிகளை அறவிடுவதால் மக்கள் தொடர்ந்தும் துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். நாட்டின் எந்தவொரு அரசாங்கமும் இதற்கு முன்னர் முன்னெடுத்திராத வகையிலேயே இந்த அரசாங்கம் வரிகளை அறவிட்டு வருகின்றது. இதனால் மக்கள் பாரிய சுமைக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் பந்துல குணவர்தன எம்.பி தெரிவித்தார்.


Add new comment

Or log in with...