காத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட் | தினகரன்

காத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்

தீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன  காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு உயிர்த்தெழுந்துள்ளது.

"2019ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம், அதனை ஒரு துரதிஷ்ட சம்பவமெனக்கருதி, கவலையில் மூழ்கி இருக்கும் காத்தான்குடி பிரதேசத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களும், மேற்படி தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக பல இழப்புக்களும் சேதங்களும் அவர்கள் மீதே திணிக்கப்பட்டிருந்தது.

இவை தவிர மிக பாரியளவிலான பிரச்சனைகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் முகம்கொடுத்து வந்துள்ள காத்தான்குடி பிரதேசம் தற்பொழுது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருவதுடன் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்ற தமிழ் - முஸ்லிம் உறவில், திடீரென ஏற்பட்டிருந்த பாரிய விரிசல்கள் களையப்பட்டு, அவர்களுக்கு மத்தியில் தற்பொழுது பன்மைத்தும் கொண்ட ஒரு சிறந்த நல்லுறவுக்கான சூழலொன்று   ஏற்படுத்தப்படுவதாக பிரதேசத்திலுள்ள பலரும் உணருகின்றனர்.

இவ்வாறு, ஒரு அசுர வேகத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு என்னென்ன வகையிலான முயற்சிகள், முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? போன்ற விடயங்கள் குறித்த உரிய கள நிலவரங்களை அறியும்பொருட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் துறைசார்ந்தோர் பலரிடம் நேரில் சந்தித்து கேட்டறிந்து கொண்ட சில முக்கியமான தகவல்களை எமது வாசகர்களுக்காக இங்கு சுருக்கமாக தருகிறோம்."

2019ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாகவும் அதற்கு பின்னர் தவறான ஊடக பிரசாரங்களினாலும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் துன்பத்திற்கும் மத்தியில் சிக்கித்தவித்த காத்தான்குடி பிரதேசம் தற்போது நூறு வீதம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளது.  

மேலும் மடடக்களப்பு மாவடடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு மேலாக தாய்மொழியை தமிழ் மொழியாக் கொண்டு வாழ்ந்து வருகின்ற தமிழ் - முஸ்லிம் உறவில் பாரிய திருப்புமுனை உருவாகியுள்ள அதேவேளை, சிங்கள சமூகத்தினருக்குமிடையிலான உறவுகளிலும் முன்னேற்றம் கண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் முஸ்லிம்களுக்கு எதிராக சிலரால் முன்னெடுக்கப்பட்டிருந்த தவறான ஊடக பிரசாரங்களினாலும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மாத்திரமல்லாது, நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளான போதிலும் குறித்த, சம்பவத்துடன் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் முக்கிய நபர், கிழக்கு மாகாணத்தின் - காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினால் அம்மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அரச நிருவாக செயற்பாடுகள், வைத்தியசாலையின் பணிகள், பாடசாலை கல்விசார் நடவடிக்கைகள், வர்த்தகத்துறை ஆகிய இன்னோரன்ன அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தாக குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அதனுடன் நின்றுவிடவில்லை, மாறாக, கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை மக்களான தமிழ் - முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி அதில் குளிர்காய்வதற்கு பேரினவாத சக்திகள் சர்வாதிகார போக்கினால் தமிழ் - முஸ்லிம் உறவுகளில் பாரிய விரிசல்கள் எற்பட்டு அங்கு,  அம்மக்களினது இயல்பு வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருந்தாதாகவும் அப்பிரதேச மக்கள் ஆதங்கப்பட்டிருந்தனர் .

இவ்வாறு, எதிர்பாராத வகையில் அங்கு, ஏற்பட்டிருந்த பல பிரச்ச்சினைகளுக்கும் பிளவுகளுக்கும் முகம் கொடுத்துவந்த காத்தான்குடி பிரதேசம் மிக அசுரவேகத்தில் அங்கிருந்த பல்வேறுபட்ட அனைத்து விரிசல்களும் களையப்பட்டு, தற்போது நூறு சத வீத இயல்பு வாழ்க்கைக்கு அப்பிரதேசமக்கள் திரும்பியுள்ளதாகவும் மற்றும் அங்குள்ள வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட இன்னோரன்ன அரச தனியார் நிருவாகச் செயற்பாடுககளும் வழமைக்கு திரும்பியுள்ளதாக காத்தான்குடி நகர சபை முதல்வர் எஸ்.எச்.முகம்மது அஸ்பர் தெரிவித்தார்.    

இந்த வகையில் இனங்களுக்கிடையில் ஊடுருவியிருந்த இனப்பூசல்கள் களையப்பட்டு, தற்பொழுது சிறந்ததொரு பன்மைத்துவமான நிலைமை  உருவாகியுள்ளமை காலத்தின் கடடாயத்தேவையென உணரப்பட்டிருக்கும் இத்தருவாயில் இவ்வாறான பன்மைத்துவ உறவு முறையினை தொடர்ந்தும்  தக்கவைத்துக்கொள்ள அனைத்து சமூகம் சார்ந்த சமயத் தலைவர்கள், கல்விமான்கள் அரசியல் பிரமுகர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் முன்வந்துள்ளமை சமகாலத்தில் எல்லோராலும் வரவேற்கத்தக்க விடயமென பார்க்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வகையில் 'கடும்போக்காளர்களின் வீணான கட்டுக்கதைகளுக்கு அஞ்சி, பல குழப்பங்களுக்குள் சிக்கிக்கொண்டுள்ள கிழக்கு மாகாண மக்கள், அதனை முற்றாக மறந்த நிலையில், 'தமது தொழில் ரீதியாகவோ அல்லது வேறேதும் தேவைகள் காரணமாகவோ யாரும் எந்த நேரத்திலும் காத்தான்குடி பிரதேசத்திற்கு  வரலாம் போகலாம் அவர்களுக்கான பாதுகாப்புக்ககள் உடனான ஏனைய மனிதநேய விடயங்கள் என்பன கவனம் கொள்ளப்படும்' என காத்தான்குடி நகர சபை அறிவிப்பு செய்திருகின்றது.

அதுபோன்று, காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி நகரில் நகர சபை உறுப்பினர்களினது ஒட்டுமொத்த முழுமையான பங்களிப்புடன் 'சிட்டிப்பொல' என்ற பெயரில் 'இன புரிந்துணர்வுக்கான - சுந்திர வர்த்தகத்தை பறைசாற்றும் சிநேக பூர்வ பொது சந்தை' ஒன்றினை நாம் சென்ற கிழமை ஆரம்பித்து வைத்துள்ளோம். இந்த சிட்டிபொல என்ற சந்தையில் சாதாரண மற்றும் நடுத்தர வியாபார நிலையில் காணப்படுகின்ற அனைத்தின வர்த்தக சமூகத்தை ஒன்று திரட்டி, அவர்களின் வியாபார நடவடிக்கைகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, தத்தமது வியாபார நடவடிக்கைகளை முன்நெடுத்துச் செல்ல காத்தான்குடி நகர சபை அதற்கான  களத்தினை அமைத்துக்கொடுத்துள்ளது.

ஆகவே இன புரிந்துணர்வுக்காக வேண்டி அமைக்கப்பட்டுள்ள இந்த சிட்டி பொல மூலம் இன உறவுகள் வளர்க்கப்படவேண்டும் அதற்கான ஒத்துழைப்புக்களை நாம் எதிர்பார்க்கின்றோம். 

மேலும் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அவ்வாறான செய்திகளும் அதுபோன்ற பணிகளும் பொதுவாக அனைத்து சமூகங்களினது மத்தியில் நல்லெண்ண உறவுக்கான பாலமாக அவை அமைந்துள்ளதாக நான் கருதுகிறேன்.   

இப்பிரதேசத்தில் ஒரு நிரந்தர நிம்மதியான சூழலொன்றை கட்டியெழுப்புவதற்கான பகீரத பிரயத்தனங்களும் உத்வேக போராடடங்களும் நகரசபையுடன் மாத்திரம்  முடிந்துவிடவில்லை மாறாக, கிழக்கு மாகாண சிவில் அமைப்புகள் மத பெரியார்கள், கல்விமான்கள், முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் உட்பட அப்பிரதேசத்தில்  இயங்குகினற அரச காரியாலயங்கள், ஆஸ்பத்திரி என்பனவும் மற்றும் வர்த்தக சங்கம், நூதன சாலை, பாடசாலைகள்  உள்ளிடட அதன் பிரதானிகள் பலரினது கூட்டு முயற்சியின் அதிரடி நடவடிக்கையினால் இவ்வாறு அனைத்து விடயங்களிலும் வீழ்ச்சியை நோக்கிச் செல்லவிருந்த காத்தான்குடி நகரத்தை துரித கெதியில் மீண்டும் பழைய நிலைமைக்கு மாற்றியமைக்க வழி கிடைத்திருப்பதாக தெரிவித்த காத்தான்குடி நகர சபை முதல்வர் கடந்த காலங்களில் காத்தான்குடிப் பிரதேசத்தையும் அப்பகுதி மக்களைப்பற்றியும் சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பாக மிகமோசமாக விமர்சித்து வந்துள்ள விடயங்கள் வெறும் அர்த்தபுஸ்ட்டியாகிவிடடதக்கவும் அவர் குறிப்பிடடார் 

மேலும் இதன் பூர்விக தரவுகளை சுருக்கமாக தெரிவிப்பதானால்,

கிழக்கு மாகாணத்தின் மடடக்களப்பு மாவடடத்தில் மட்டு நகரிலிருந்து சுமார் 3கி.மீ தூரத்தை கொண்ட காத்தான்குடி நகரம் வெறும் 4.5கி.மீ சதுர கிலோமீற்றர் பரப்பைக்கொண்ட தனி முஸ்லிம் பிரதேசமாகும். மேலும் இந்நகரின் அழகுக்காகவும் நிழலுக்காகவும் நகரின் நடுப்பகுதியில் பேரீத்தம்பல மரங்களும் அதனுடன் நிழல் தரும் இன்னும் பல மரங்களையும் நட்டியுள்ளோம். மாறாக இதனை வைத்து இப்பிரதேசத்தை ஒரு அரபு ராஜ்ஜியமாக விமர்சிப்பது முற்றிலும் தவறான கண்ணோடடமாகும். கொழும்பிலிருந்தும் தெற்கிலிருந்து ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதை விடுத்து, இங்கு வாருங்கள் எங்களை சந்தியுங்கள் நிதர்சனங்களை புரிந்து கொள்ளமுடியும் என அறிக்கைவிடுபவர்களை நகர அழைக்கின்றது.

இங்கு, சுமார் 55ஆயிரத்து 700பேர் வசிப்பதாகவும் இங்குள்ளவர்கள் 75வீதமானவர்கள் வியாபாரிகளாக தமது பிரதான தொழிலைக் கொண்டுள்ள அதேவேளை,   காத்தான்குடி பிரதேசத்திலிருந்து சென்றுள்ள வியாபாரிகள் சுமார் சுமார் 2ஆயிரம் வர்த்தக நிலையங்களுடன் இப்பிரதேச மக்கள் தமது வியாபார நடவடிக்கைகளை வெளியிடங்களில் மேற்கொண்டு வரும் நிலையில் எமது காத்தான்குடி பிரதேசத்திற்குள் சுமார் 80 - 90க்கு இடைப்படட எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்கள் இப்பிரதேசத்தில் வியாபாரம் செய்கின்றனர்.

மேலும் இதற்கு அப்பாலும் சகல துறைகளையும் சேர்ந்த ஆண் மற்றும் பெண் தொழிலார்கள் உட்பட மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் தினமும் தொழில் நிமித்தம் காத்தான்குடிக்குள் வந்து செல்கின்றனர் ஆகவே அத்தனை போரையும் நாம் அன்புக்கரம் நீட்டி அழைக்கின்றோம்

மேலும் மாத்தறை, ஹம்ம்பாந்தோட்ட, மொறட்டுவை ஆகிய மாவட்ட்ங்களிலிருந்து மீனவ மற்றும் தச்சுத்தொழில் நிமித்தம் பலர் சுமார் 25, 30 வருடத்திற்கு மேலாக இப்பிரதேசத்தில் இன்னும் வாழ்ந்து வருகின்றனர்.

தொழில் நிமித்தம் வருவோர்களுக்கும் மேலும் இங்கு நிரந்தரமாக வாழும் மாற்று மதத்தினத்தினத்தைச் சேர்ந்த எவருக்குமே இது காலவரை அவர்களின் இருப்பிடத்திற்கோ அல்லது தொழில் ரீதியாகவோ முஸ்லிம்களினால் எந்த இடையூறுகளும் இடம்பெற்றதில்லை என தெரிவித்த நகரபிதா குறிப்பாக இங்கு வாழுகின்ற அல்லது இப்பிரதேசத்திற்கு தினமும் வந்து செல்கின்ற சிங்கள, தமிழ் மக்களுடன் இங்குள்ள முஸ்லிம்கள் எப்பொழுதும் மிகவும் அந்நியோன்ய உறவுகளை வைத்துக்கொண்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி முஸ்லிம்கள் இன்னும் இவ்வாறான உறவுகளை தக்க    வைத்துகொண்டுவருகின்றனர். அதாவது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு சமூகத்தினரின் உதவி மற்றுமொரு சமூகத்திற்கு அவசியமின்றி வாழமுடியாது என்பதை அனைவரும் உணர வேண்டிய கடப்பாடுடையோர்கள்.

இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் ஒருபோதும் வன்முறையை விரும்பாதவர்கள், இவர்கள் இந்நாட்டின் இறைமைக்காக உழைத்தது வந்துள்ள அதேவேளை  நாட்டில் வாழும் பெரும்பான்மையான  சிங்கள தமிழ் மக்களோடு காலகாலமாக ஒரு பன்மைத்துவத்துடனான வாழ்க்கை திடடத்தினை முன்னெடுத்து  வந்துள்ளதாகவே சரித்திர வரலாறுகள் எமக்கு பாடம் புகட்டுகின்றன என்பதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம். சத்தார் என்பவரை சந்தித்த போது தெரிவித்தார். 

கடந்த 30வருட கால யுத்தத்திலும், யுத்தத்துக்குப் பின்னரும் பல்வேறு படுகொலைகள், இழப்புகள், பலவந்த வெளியேற்றங்களைச் சந்தித்த போதிலும் கூட இன  உறவுகளை வலுப்படுத்தும் வகையில் முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகத்தினருடன் அவர்களின் உரிமைகள் தொடர்பாகவும் மற்றும் ஏனைய விடயங்களிலும்    விட்டுக்கொடுப்புகள், பரோபகாரம் போன்ற சகோதரதத்துவ பாங்குடனனே  அனைத்து பணிகளிலும் அன்று தொட்டு இன்று வரையும் நகமும் சதையும் போன்று இணைந்ததொரு வாழ்க்கை முறையினையே பின்பற்றி வாழ்ந்து வந்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் மொழியினால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மிக நீண்டகாலமாக இருந்துவருகின்ற சகோதரத்துவத்தினை தக்கவைக்கும்பொருட்டு, இன நல்லுறவு மற்றும் பன்மைத்துவ நடவடிக்கைகளுக்காக வேண்டி, அறநெறி பாடசாலை முதல் அரசியல் வரைக்கும் அதாவது, வெறும் நிகழ்ச்சி நிரலாக மட்டும் நின்றுவிடாமல் உரிய திட்டங்களை செயல் வடிவில் வெளிக்கொணரப்பட்டு, அதன் மூலம் இதர சமூகங்களுக்கிடையில் பன்மைத்துவமான இணக்கப்பாடுகளை உருவாக்கி நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு ஒரு முன்மாதிரியான பிரதேசமாகவே இந்த மடடக்களப்பு மாவடடத்திலுள்ள காத்தான்குடி பிரதேசம் அமையபெற்றுள்ளமை அனைவராலும் பாராட்டத்தக்க விடயமெனவும் தெரியவருகிறது.

இவ்வாறான கலாசார பின்னணிகொண்ட இப்பிரதேசத்திலேதான் இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதக்கூடிய 2019ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தாக்குதலும் அதன் பின்னர் முஸ்லிம்கள் மீதான ஏனைய சமூகத்தினரது சந்தேக பார்வைகளும். இது ஒரு துரதிஸ்ட்டமான நிகழ்வாகும்.

அதாவது உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தாக்குதலுக்குப் பின்னர் தவறான ஊடக பிரசாரங்களினால் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் ஒரு மோசமான நிலைமைக்கு அதாவது முஸ்லிம்களை சந்தேகத்துடன் பார்க்கும் ஒருநிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். இவ்வாறு மதத்தின் பெயராலான மிலேச்சத்தனமான வன்முறைகள் இலங்கை முஸ்லிம்கள் சார்பாக அதிலும் குறிப்பாக, இந்நாசகார சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான நபர், காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினாலும் இப்பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கைக்கு அவை ஒரு அச்சுறுத்தலாக இருந்தது. ஆகவே அவ்வாறான ஒரு நாசகார செய்யற்பாட்டினைய நாம் எமது சமூகம் அதனை முற்றுமுழுதாக கண்டிக்கின்றோம்.

**** 

'யார் என்னசொன்னாலும் கிழக்குமாகாணத்தில் வாழ்கின்ற தமிழர்களும் முஸ்லிம்களும் இரு துருவங்களாக ஒரு போதும் பிரிந்து வாழ முடியாதோ அது போலவே,  பொதுவாக இலங்கையில் வாழும் எந்தவொரு  இனமும் இன்னுமொரு இனத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தும் வகையினிலோ அல்லது குரோதங்களுடனோ வாழமுடியாது என்பதே யதார்த்தம், 'என மட்டக்களப்பு மாவடி பிள்ளையார் கோவில் நிருவாகத்தின் போஷகரும் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளின் மிக  முக்கிய பொறுப்புகளில் உள்ள பிரபல சமூகசேவையாளரும் ஒய்வு பெற்ற தபால் அதிபருமான கே.கந்தசாமி தெரிவித்தார்.

இதனைபுரிந்து கொள்ளாமல் சிலரின் சந்தர்ப்பவாத அரசியல் கலாசாரங்களுக்கும் அவர்களின் சுகபோக வாழ்க்கையினை தக்கவைக்கும் பொருட்டும், இன சுத்திகரிப்பின் மூலம் தமிழ் முஸ்லிம் சமூகத்திலான  நீண்டகால உறவை மலினப்படுத்துகின்ற நடவடிக்கைகளை புதிதாக நடைபெற்றுவருகின்றதையிட்டு நான் மிகவும் வேதனையடைகின்றேன். இது யார் செய்தாலும் எந்த இனம் செய்தாலும் இதனை  ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என  தெரிவித்த கந்தசாமி இதனால் தமிழ், முஸ்லிம் சமூகத்தின் அப்பாவிப் பொதுமக்களே நூறுவீதம் பாதிக்கப்படுகின்றனர் எனவும் கூறினார்.

சியோன் தேவாலய தாக்குதல் சம்பவத்தின் போது அதிகமாக பாதிக்கப்படடவர்கள் 13,14வயதுடைய சிறுவர்களாகவே காணக்கூடியதாக இருந்தது. நான் சம்பவத்தில் இறந்து போன 39பேரினது மரண வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு என்னால் நேரில் கண்ட அந்த அவல நிலை கண்டு, மிக ஆக்ரோஷமடைந்தேன். அந்நிலையில்  மனிதன் என்ற அடிப்படையில் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் முஸ்லிம்களைப்பற்றிய நல்லெண்ணங்கள் என்னை விட்டும் நழுவிப்போவதை  எனக்குள்ளே புரிந்து கொண்டேன். இருந்த போதிலும் நான் இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் வாழ்ந்து கொண்டிருப்பவன், 'மடடக்களப்பில் உள்ள முஸ்லிம்களின் கடைகளை எரித்துவிடுவார்களோ !'  என்ற ஆதங்கமும் கவலையும் என் மனதை உருக்கியது. ஏனெனில் நான் முஸ்லிம் மக்களுடன் மட்டுமல்ல ஏனைய இனத்தலைவரர்களையும் வெறும் அன்புசெலுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாது, உடன் பிறப்புகள் போல் நல்லுள்ளம்படைத்தவர்களை நேசித்து வருபவனும் கூட. இந்நிலையில் ஸஹ்ரான் குறித்த சம்பவம் ஒரு மிக மோசமான செயல்பாடு. யாராலும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இன்று மடடகளப்பை பொறுத்தமட்டில் காத்தான்குடியைச் சேர்ந்த அரச அதிகாரிகள் ,வர்த்தகர்கள் குறிப்பாக சிறு வியாபார துறையில் ஈடுபடடவர்கள் வழமையாக இங்கு வந்து தமது கடமைகளை மேற்கொள்கின்றனர் அது போன்று மடடக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த தமிழ் மக்கள் காத்தான்குடிக்கு செல்கின்றனர். காத்தன்குடி மக்களினதும் மற்றும் மடடகளப்பு மக்களினதும் சில செயற்பாடுகள் மீண்டும் பன்முகத்தை வலுப்படுத்தும் நிலையில் சிநடவடிக்கைகளை தான் நேரில் அறிந்த விடயமாகவும் இருந்தது, அந்த வகையில்  இரு சமூகத்தையும் பாவேண்டும் .ஆகவே குறிப்பாக கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் தனி ஒரு இனத்தால் மட்டும் வாழ முடியாது இதுதான் இங்கு யதார்த்தம் என்பதை குறிப்பாக தமிழ் முஸ்லிம் இரு சமூகங்களுமே புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கடடாயத் தேவையாகும்.

 

முஸ்லிம் சமூகத்தைப்பற்றிய சரியன தகவல்கள் அவர்களின் ஏனைய சமூகங்களோடு இணைந்து வாழவேண்டும் என்ற மனப்பாங்குகளை உரிய முறையில் வெளிப்படுத்துவதற்கான ஓர் ஊடகம் இல்லை என்பது மிக நீண்ட காலங்களாக பேசப்பட்டுவந்தாலும் அதற்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. என்பது  மிகுந்த வேதனையை தருவதாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாருக் தெரிவித்தார்.

சிங்கள ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் முஸ்லிம்கள் சம்பந்தமான பல அதிர்வுகளை வித்தியாசமான கோணங்களில் ஏற்படுத்துவதற்கான அடிப்படைக்காரணம் முஸ்லிம்களுக்கென இதுவரை தனித்துவமான ஒரு ஊடகம் இல்லாமையும் ஒரு பிரதான காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறான குறைபாடுகளை கண்டறிந்து செயல் படுத்த . இந்த   நாட்டிலுள்ள  அனைத்து  முஸ்லீம் செலவந்தர்களும் படித்தவர்களும் அரசியல் சமூகங்களினதும் தார்மிக பொறுப்பாக இருந்துகொண்டிருக்கின்றது.

இலங்கை வரலாற்றில்  ஒரு முக்கிய நிகழ்வாக கருதக்கூடிய  2019ஏப்ரல் 21ஆம் திகதி  உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தாக்குதலின் இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்புகள், மனிதப் படுகொலைகள் தொடர்பான அச்சத்தை விதைத்துச் சென்றுள்ளது. இத்தாக்குதல் சம்பவங்கள் மனித குலத்துக்கு விரோதமானவையென  என பறை சாற்றப்படட போதிலும்   இதன் பின்னணியில்  வித்தியாசமான போக்குகளையே அவதானிக்க முடிந்துள்ளது 

காத்தான்குடி மருத்துவமனையில் முஸ்லிம்களைத்தவிர வேறு எவரும் எந்தப்பணிகளும் செய்யமுடியாது எனவும் காத்தான்குடி ஒரு தனி மாநிலம் என்று கொழும்பிலிருந்து சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவ்வாறு ஊடகத்தில் குறிப்பிடுவது போல் காத்தான்குடி  எந்தவொரு தனி மாநிலமாகவோ அல்லது சில குறிப்பிடட இனத்துக்கான மருத்துவமனையோ இல்லை, காத்தான்குடி ஏனைய கல்முனை மடடகளப்பு போன்று ஒரு  நகரமாகும். ஆகவே இலங்கையில் இன நல்லுறவை உருவாக்கும் ஒரு மருத்துவமனை இருக்குமானால்  அது காத்தான்குடி மருத்துவ மனையாகும் என காத்தான்குடி ஆதாரவைத்திசாலையின் பணிப்பாளர் டாகடர் எம்.எஸ். முஹம்மது ஜாபிர் தெரிவித்தார்

எமது மருத்துவ மனையில் 27மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் 14பேர் தமிழ் மருத்துவர்கள்.  ஒரு மருத்துவர் சிங்களவர். மீதமுள்ள 11மருத்துவர்கள் முஸ்லிம்கள். இந்த மருத்துவமனையில் 43தாதிமார்கள் பணியாற்றுகின்றனர். இதில் ஏழு முஸ்லிம் தாதிகள் மட்டுமே உள்ளனர். ஆறு சிங்கள தாதிமார்களும் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். மீதமுள்ள 30பேறும் தமிழ் தாதிமார்களாவர்.

இந்த மருத்துவமனையின் ஊழியர்கள் தமது கடமைகளுக்கு அப்பாலும் மனிதாபிமான வகையில் இன்னோரன்ன சேவைகளை முன்னெடுத்துவருகின்றனர். அதாவது,   கைவிடப்பட்ட தாய் தந்தைகள் மற்றும் அனாதை பிள்ளைகளை   வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள், அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குகிறார்கள் இவ்வாறான மனித நேயத்தின் பணிகளுக்காக .அவர்கள் ஒரு தனி கட்டிடத்தையும் அமைத்துள்ளனர்.

"யார் எங்கு எவ்வாறு முறைப்பாடு செய்தாலும்   வீதியில்  செல்லும் ஏழைகளுக்கு நாங்கள் உதவுவோம். இது எங்கள் மருத்துவமனை ஊழியர்களின் கூட்டு முயற்சியினால் " நடைமுறைப்படுத்தப்படுகின்றது 

கொழும்பில் இருந்தோ அல்லது வேறு இடத்திலிருந்தோ காத்தான்குடியை சுட்டிக்காட்டுபவர்கள் காத்தான்குடிக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்தால் நிதர்சமான நிலைமைகளை கண்டுகொள்ள முடியும்.. காத்தான்குடி   ஒரு அரபு ராஜ்ஜியமல்ல,   இது நல்ல வளமிக்க  ஆதரவைத்தியசாலை ஆகவே   இந்த காத்தான்குடி  மருத்துவமனை இன ஒற்றுமைக்கான   ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். என அவர் தெரிவித்தார்

***

மேலும் எமது ஊழியர்கள் அனைவரும் யாருடனும் திறந்த மனதுடன் பேசுவார்கள். என்றவுடன், காத்தான்குடியி மருத்துவ மனையில் சுமார் ஐந்து வருட காலமாக தாதியாக கடமை புரிந்து வரும்  திருமதி சந்தமாலி  என்றஒரு சிங்கள தாதியைச் சந்தித்தேன். களுத்துறை என் வீடு,.  நான் முன்பு கோட்டை மருத்துவமனையில் பணிபுரிந்தேன்.  அங்கிருந்து இடமாற்றமாக  காத்தான்குடிக்கு வந்து, இப்போதைக்கு ஐந்து வருடங்கள் ஆகின்றன..  நான் இங்கு   வந்ததிலிருந்து  இன்று வரை மிகவும் சந்தோசமாக பணிபுரிந்து வருகின்றேன்  எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.இங்கு கடமை புரிகின்ற ஏனைய தமிழ் முஸ்லீம் ஊழியர்களிடம்   நான் எந்த மாற்றத்தையும் உணரவில்லை.  பணிபுரிகின்ற ஏனைய முஸ்லிம் மற்றும் தமிழ்  தாதிமார்கள் என்னுடன் ஒற்றுமையாகவும் அன்பாகவும் இரக்கமாகவும்  பழகுகின்றனர். எனக்கு மிகவும் ஒத்துழைப்பு நல்குவதாக   அங்கு பணிபுரிகின்ற தாதி சந்தமாலி கூறினார்

 (எம்.ஏ.அமீனுல்லா)

 


Add new comment

Or log in with...