வாகன விபத்தில் ஒருவர் பலி | தினகரன்


வாகன விபத்தில் ஒருவர் பலி

ஹபரண நகரிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹபரண – மின்னேரிய வீதியில் இன்று (18) பகல் 3.05 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியொன்றும், இராணுவத்தினர் பயணித்துக்கொண்டிருந்த வேனொன்றும் நேருக்குநேர் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி மற்றும் அதில் பயணித்த நால்வர் காயமடைந்த நிலையில் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் முச்சக்கரவண்டிச் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த ஏனையோர் மேலதிக சிகிச்சைகளுக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

41 வயதுடைய ஹிங்குரக்கொடவை சேர்ந்த முச்சக்கவண்டிச் சாரதியே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தை தொடர்ந்து குறித்த வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் வேன் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் ஹபரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் ஹபரண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...